**** காதலர் தினம் அன்று - ஒரு மலைப்பயணம்! பகுதி - 2

காதலர் தினம் அன்று - ஒரு மலைப்பயணம்! பகுதி - 2

 வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼

                                                     
          நீங்கள் எதிர்ப்பார்க்கும் இளவரசி பயணம் போல் இருக்காது ஏன்னென்றால் என்னுள் ஓம் நம சிவயா என்னும் திருநாமத்தை தவிர வேறு எந்த சிந்தனையும் உதயமாகவில்லை , நான் ரசிக்க மறந்த தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன் , 

                                                                        இந்த பதிவில் வரும் அனைத்தும் புத்தகம் , வலைதளம் மற்றும் சென்ற அனுபவம் வைத்து உருவாக்கப்படுகிறது.மேலும் தகவலுக்கு இம்மலைக்கு அருகில் இருக்கும் ஈஷா யோக மையத்தின் சார்பில் தென்கைலாய பக்திப் பேரவை செயல்படுகிறது. இந்த அமைப்பு மலையேறும்பக்தர்களுக்கு   வழிகாட்டி, யாத்திரைக்கு உதவுகிறது. வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்  🙏🏼


மூன்றாவது மலையில் சில சரிவு பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும் . சரிவான பாறையில் ஏறி வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயரிடப்பட்டது . அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர் . மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது . நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும் . 
பத்து வருடங்களுக்கு முன்பாக வரை கயிறு கட்டியே கடந்துள்ளனர். 


இந்தப் பாறையைக் காலையில், அல்லது மாலையில் கடப்பது சுலபம். வெய்யிலில் ஏறினால் கால் கொப்பளித்து விடும்.  மழை காலங்களில் இந்த படி வழியே தான் மழை நீர் செல்கின்றது . மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன . சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது . மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது . ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர் . இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன . இங்கு வாழும் மக்கள்
வேங்கை மரத்திலிருந்து வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்கின்றானர் . வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகர என்பதுடன் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர் . இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது . 



                                                  கைதட்டி சுனை 

கைதட்டி சுனை அடைந்து, அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோன்சு கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை விட சுவையாகவும் ,  அதிகமாகவும் வருகின்றன,. கை தட்டினால் தண்ணீர் வேகமாக வரும் என கூறுவது உண்டு.

ஒருவிதமான புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என தெரிந்து கொள்ளலாம் .ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் எந்தவிதமான குறியீடும் இல்லை . நான்காவது மலை ஈச்சல் திட்டு. இதமான தென்றல் வீசும் மலை. 

இந்த மலையை திருநீர் மலை ,ஒட்டன் சமாதி மலை , எனவும் கூறினார்கள் . பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது . சுமார் 25 % சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை . இம் மலை வாழ் மக்கள் மதுர களி பாக்கு அதிக அளவில் விளை செய்கின்றன . இம் மலையில்சீற மஞ்சள் என்றும் வாடாத மஞ்சள் காணப்படுகிறது .

மலையின் மேற்பரப்பு பசும் பால் நிறம் போன்று திருநீரை தரைப் பகுதியைக் கொண்டவை.இங்கு வரும் ஏராளமான பக்தர்கள் நிலத்தைத் தோண்டி விபூதி சேகரித்திருக்கிறார்கள் என்பதை அங்கிருந்த குழிகள் விளக்குகின்றன. என்னைப் பொறுத்தவரை, அவை குறிஞ்சித் தாய் உடலில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள். அதனால், நான் அதைச் செய்யவில்லை. அந்த மண்ணைத் தொட்டு எங்கள் நெற்றியில் பூசிக்கொண்டோன்.

                                                           பீமன் களியுருண்டை

ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர் . இந்த படத்தை பார்த்தால் ஏன் பெயர் வந்ததுன்று உங்களுக்கே புரியும் , பெரிய களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் குறிஞ்சிப் பூ செடிகள்  செண்பக மரங்கள் , அதிக அளவில் தென்படுகின்றன . பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது .
இம்மலையில் ஏற்ற இறக்கம் அல்லாமல் சமவெளி போன்ற பகுதிகள் அதிகம் 
, இப்பகுதியில் பயணிக்கும் போது , கோடை காலத்திலும் கூட கடுங்குளிர் அதிக வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும் . இந்த கடுமையான பனிப்புயல் அடிக்கும் போது அனுபவம் வாய்ந்தவர்கள் அங்கு இருக்கும் குகைகளில் சென்று புகுந்து கொள்வார்கள். நான் வளைகுடா நாடுகளில் அங்கு வேலை செய்ததால் அங்குவுள்ள தட்பவெப்பனிலை மற்றும் கடும் குளிர் பழகியதால் , இது எனக்கு பெரியதாக தெரியவில்லை இக்குளிரிலிருந்து காக்க கம்பளி உடைகளான மப்ளர் , ஸ்வெட்டர் , தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம் .பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்தோன்.









(தரிசனம் தொடரும்)






Post a Comment

1 Comments