**** இளவரசியின் சந்திப்பு - பகுதி - 1

இளவரசியின் சந்திப்பு - பகுதி - 1


                                                       கொடைக்கானல் மலைகளின் இளவரசி


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


தலைப்பை பார்த்தவுடன் பெண்களை பற்றி சொல்லப் போறேன் என்று எண்ண வேண்டாம் இது
கொடைக்கானல் மலைகளின் இளவரசியை பற்றியை பயணம்💐 வாருங்கள் பயணிப்போம்🙏🏼


நான் என் தமையன் ஜிவானந்தம் மற்றும் மகன் (மைதினி மகன்) பிரசன்னா நாங்கள் மூவரும்
அன்பு என்ற ஒன்று கட்டுப்பட்டால் சகாச பயணத்தை மேற்க்கொள்ளாமல் தூத்துக்குடியிலிருந்து பேருந்தில் கொடை மலை பேரழகி இளவரசியை காண சென்றோம்.அந்த இளவரசியின் வராலற்றை படித்து செல்லும் போது பேருந்துவுடன் சேர்ந்து பல எண்ணோட்டங்கள் என்னுள் ஒடியது, ஓடியது என்னவோ மனம் மட்டும் தான்  என்று தவறாக நினைத்தேன் நேரமும் கூட கதிரவன் தன் வீட்டை அடைந்தான் , எங்கும்இருள் சூழ்ந்தது அங்கங்கே அரசியல் நல்ல தலைவர்கள் தோன்ற்றுவது போல் மின் விளக்குகள் எரிந்தன , சிறிதும் எதிர்ப்பார்க்கதா வேளையில் தூங்கி கொண்டிருக்கும் கணவன்மார்களை மனைவிமார்கள் எழுப்புவது போல் மழை சாரல் என்னை எழுப்பியது ,சராளங்களை அடைக்க முற்பட்டபோது அப்போது கண்ட காட்சி அது பிராமிக்கடைய செய்தது வெள்ளியை உருக்கி ஒடுவதுப் போல் அருவியிலிருந்து நீர்வீழ்ச்சி ஒடியது .

                                                   




வெள்ளி நீர்வீழ்ச்சி(silver cascade falls):
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.


நீர்வீழ்ச்சி ஒடிவது போல் சிறிது கானதூரம் பேருந்து ஒடியது ,நள்ளிரவு ஹோட்டலை அடைந்தோம்
பயணச் செய்த களைப்பில் அப்படியே   ஆழ்ந்த  அந்த நினைவுகளோடே நித்திரை வரை என் நித்திரைகளிலும் கூட திரிந்து கொண்டே திரிந்தது அந்த இளவரசியின் நினைவு உறக்கம் ஒன்றே என்னை அமைதிபடுத்தியது. என் நாசியை ஆக்கிரமித்து என்னை எழுப்பியது அக்கரத்து காபி மணம் அந்த ஹோட்டலில் , வெளியே வந்து இயற்கை மிண்டும் காதலிக்க ஆரம்பிக்க தொடங்கினேன் , மாமாவை கண்டவுடன் அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டு   கள்ளப்புன்னகைவுடன்  மற்றும் ஒரப் பார்வைவுடனும்
எட்டிப் பார்ப்பது போல் கதிரவன் பேரழகி  மலைகளிருந்து நடுவில் எட்டிப் பார்த்தான், அதே புன்னகைவுடன் நாங்கள்  வெளியே செல்ல கிளாம்பினோம்.

 

 அந்த  ஹோட்டலின் உதவியுடன் நாங்கள்  காரை எடுத்து  இளவரசியை காணச் சென்றோம் , அந்த மலையின் பேரழகி இளவரசி வரலாறைத் தெரிந்துக் கொள்ள அருகாட்சியை சென்றடைந்தோம் , அங்கு கண்ட காட்சியையும் , சிறப்பையும் என்னை மேலும் அந்த பேரழகியை காதலிக்கத் தூண்டியது , இந்த அருங்காட்சியத்தில் மனித இனத்தை கருவில்யிருந்து உருவாகுவதை மிகவும் தத்துருவமாக காட்சியளிக்கப்பட்ட்து ,
எண்ணற்ற உயிரனங்கள் வாழ்ந்த & வாழுகின்ற அதற்கு ஆதரமாக இருந்தது  , அதை பாதுகாத்தும் மற்றும் பராமரித்து வாருகின்றன ,    ஒரு சில கொடூர மிருக மனிதனின் காதல் போல் இல்லாமல் அங்கு வாழ்கின்ற உயிரனங்கள் அனைத்தும் பேரழகி இளவரசியை காதலித்து வருகின்றன , நாங்கள்அருங்காட்சியில் விடைபெற்று வண்ணப் பூஞ்சோலைக்கு போக முடிவு செய்தோம்.








செண்பகனூர் அருங்காட்சியகம்:

           இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.


நன்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் எங்களுக்கு பயண வழிகாட்டியவும் மட்டுமின்றி தாத்தா பாட்டி தன்அனுபவத்தை பேரன்களுக்கு பகிர்வது போல இளவரசியில் வாழும் ஜனங்களை பற்றியும் அங்குள்ள சிறப்புகளையும் சொல்லிக் கொண்டு வந்தார் ,    மலைகளின் வளைவுகள் மற்றும் செல்லும் வழியெங்கும் மேடு பள்ளங்கள் மனிதர்களின் வாழ்க்கையை போல , கடைசியில் சிறிது காததூர பயணத்துக்கு பின் வண்ணப் பூஞ்சோலையை அடைந்தோம் , இரண்டு காந்த அலைகள் ஒன்றோடு ஒன்றாக ஈர்ப்பது போல் அந்த வண்ணப் பூஞ்சோலை எங்களை கவர்ந்தது , 􏱬கண்னை கவரும் அழகும் நாசியை நிறைக்கும் இனிய மணமும் பொருந்திய அந்தப் பூஞ்சோலை ஆர்வம் திர நுகர்ந்து பார்த்தேன்  அந்த பூஞ்சோலையில் உலா வரும் போது எண்ணிடாங்கத எண்ணோட்டங்கள் என்னுள் வந்தன , அவை சூதாட்டத்தில் பாண்டவர்கள் நாட்டை இழந்தது போல் இங்கே சில பூக்கள் சிதறிருந்தன , அக்கா மகளை குறும்பாக தொட்டல் சினுங்குவது போல தொட்டல் சினுங்கும் தாவரங்களும் உள்ளன .  கடலுக்கு சென்ற எம் மீனவ மக்கள்  வெறுங்கைவுடன் திரும்பி வந்து தன் வலையை கடல் மேற்பரப்பில் பரப்புவார்கள் எதற்கும் பயன்படாத சிறு மீன்களும் , சங்கு , சிப்பிகளும்  அதே போலிருந்த சில பூக்கள் , பெரிய பெரிய பணக்கார மற்றும் அரசியல் உழல்வாதிகள் வீடுகளில் காணப்படும் அரிய வகை பூக்கள் அங்கங்கே , என் தேசத்தில் உழல் படர்ந்து விரிந்துருப்பது போல இங்கு செடி கொடிகள் காணப்பட்டன,  12 வருடத்திற்க்கு ஒருமுறை சொந்தகாரர்களை காணுவது போல அங்கங்கே குறிஞ்சி செடிகள் நான் சென்ற நேரம் என்னவோ மாமியார்கள் சில மருமகளை மலடி என்று சொல்வது போல குறிஞ்சி செடிகளை கண்டேன். மொட்டு பற்கள் வைத்து 
புன்முறுவல் புரியும் மழலை போல ஆங்கே சில மொட்டுப் பூக்கள் , காதலர் தினத்தன்று காதலன் காதலியிடம் கொடுக்கும் பலவகை ரோஜாக்கள் இந்த பேரழகி இளவரசி பூக்காரிடம்,  தமிழர்களின்   வரலாற்றை அழிக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு எற்ற வசனம் இங்கே கண்டேன் 👇🏼👇🏼👇🏼👇🏼

‘“ என்னை பறிக்காதிர்கள் நான் உயிர் வாழ வேண்டும் “”””

இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லை இங்கு வரும் குரங்கு வகை மனிதர்களுக்கும் பொருந்தும் .🙏🏼



 



ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.
150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.


(பேரழகி காதல் பயணம் தொடரும் )



Post a Comment

15 Comments

  1. அருமை அண்ணா..

    ReplyDelete
  2. Migavum alagana pathivu nanba valthukal

    ReplyDelete
  3. Super Dhamu by rajsankar tuty....
    Hope you enjoyed the trip very well... Athan varnichu eluthiruka..great thambi

    ReplyDelete
  4. Super damodaran.. good feel

    ReplyDelete
  5. Superrr �� Continue Ur posting

    ReplyDelete
  6. Superrr ... Continue Ur posting

    ReplyDelete
  7. அருமையான முயற்சி அண்ணா. உங்களின் எழுத்து திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களின் உதாரணம் அனைத்தும் அருமை.. . உங்களின் தேடல் தொடர வாழ்த்துகள் ..

    ReplyDelete
  8. Semma dhamu...read pannum pothu kodaikannal pona feel pa..superb...

    ReplyDelete
  9. pandian laxman21 May 2020 at 10:04

    தாமோதரன் அருமையாக உள்ளது தொடருங்கள்!

    ReplyDelete