கொடைக்கானல் மலைகளின் இளவரசி
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
இந்த அழகான மலை பேரழகி இளவரசியின் பெயரை கெடுப்பதுற்கே இந்த இடம் பசுமைப் பள்ளதாக்கு ( suicide point ) .
வாழ எவ்வுளவோ வழிருந்தும் வாழமல் உயிர் துறித்துருக்கிறார்கள் ,அவை
காதல் எனும் அசட்டுத்தனம் , காலித்தனம் எல்லாம் கதைகளிலும் , பத்திரிக்கையிலும் , சினிமாவிலும் தான் நடக்கும் அதை பார்த்து சில அறிவற்ற ஜன்மங்கள் கெட்டுபோகின்றன ,காதல் என்ற வார்த்தைகே தகுதியேல்லாத கோழை காதலர்களும் , தகுதிக்கு மீறி கடன் வாங்கியவர்களும் ,சில சாதி வெறி பிடித்த மிருகங்களால் வேட்டையாடபட்டவர்களும் ,இங்கே
எண்ணற்ற சடலங்கள் எடுக்கப்பட்டுருக்கின்றன மற்றும் இன்னும் சில பேர் இங்குள்ள செடி கொடிகளுகளுக்கு,மரங்களுக்கு உரமாக விதைக்கப்பட்டுருக்கிறார்கள்.
இங்கே குரங்குகள் எண்ணிக்கை அதிகம் காணப்படும்
மனிதர்கள் மனிதர்களாக இருந்தால் குரங்குகளால் ஆபத்து நேரிடாது , அரசியல்வாதிகள் 364 நாட்கள் வஞ்சக எண்ணத்துடன் வாழ்ந்துவிட்டு ஒரு நாள் ( பிறந்த நாள் ) அன்று மட்டும் உணவு தானம் செய்வது போல் இங்கே குரங்களுக்கும் செய்தனார் , அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை ! அனைவருக்கும்
இது பொருந்தும் , மதிய வேளையில் தெருயொரங்களில் சிறுவர்கள் விளையாடுவதை போல் இங்கே குரங்குகள் துள்ளி குதித்து விளையாடின , அதே தெருக்களில் அம்மாகள் தம் பிள்ளைக்கு பணிவிடை செய்வதும் (பேன் பார்ப்பது ) ,பிள்ளைகள் அம்மாகளுக்கு அதே பணிவிடை செய்வதும் இந்த குரங்குகளிடமும் கண்டேன் .இதை கண்ட பின் குரங்குயில் இருந்து நாம்
வந்தோம் என சில அறிஞர்கள் சொன்னது உண்மையா ?? இல்லையா?? என்று மனம் உள்ளூர துணுக்குற்றது.
அரண்மனைகள் மற்றும் கோவில்களில் செயற்கை தூண்களை பார்த்து அலுத்து போயிருந்த எங்களுக்கு ! இந்த இளவரசி மலையின் இயற்கை தூண் பாறைகளை கண்டு வியந்து பார்த்தோம் , மட்டை பந்தாட்டத்தில் ( cricket) stumps உபயோகிப்பது போல் இந்த மூன்று இயற்கை தூண் பாறைகளை மேகக் கூட்டங்கள் மோதி ஒன்றோடு ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன ,
ஆதி காலத்தில் வாழ்ந்த மனித இனம் உடல்களை மறைப்பதற்கு தான்ஆடையை பயன்படுத்துவது மாதிரி இந்த இளவரசி தூண் பாறைகளை மேகக் கூட்டங்களை கொண்டு மறைத்து விடுகிறாள் , “பொறுத்தால் பூமி ஆள்வார்” என்ற
பழமொழிக்கு ஏற்ப இங்கே பெருமையுள்ளவார்களுக்கும் மட்டுமே மேகக் கூட்டங்கள் கலைந்து காட்சியளிக்கபடும் , தந்தையின் பிடியிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம் !,தனித்து நின்றுவிட்டோம் ! என்று மகன் எண்ணுவதும் ! தூண் பாறைகளும்
எண்ணுகின்றன ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும் , பாறைகள் உடைந்த பின்
சிற்பமாவதை பார்த்திருப்போம் இங்கே இயற்கையாக செதுக்கிய இந்த தூண் பாறைகள் ,
சிற்பமாவதை பார்த்திருப்போம் இங்கே இயற்கையாக செதுக்கிய இந்த தூண் பாறைகள் ,
தனித்து இருப்பவர்கள் உயர்ந்துருக்கிறார்கள் ! அதற்கு இந்த தூண் பாறைகள் ( pillar rock ) உதாரணம் என்று எண்ணி கொண்டு அடுத்த இடத்தை அடைந்தோம் பியர் சோழா அருவி (bear shola falls) .
இந்த அருவியில் கரடி நீர் அருந்துவதாகவும் அதனால் இதற்கு இப்பெயர் பெற்றது,
பாறையின் சிறையில் பிடியில் நடுவே இருக்கும் மரம்,செடி , கொடிகளுக்கு முகம் கழுவியும்,வேர்களுக்கு தலைவாரியும் அருவிகள் பாய்ந்தன , இசைஞானிகளுக்கு பின்னிசையாக இந்த அருவியின் சத்தம் கேட்டுக் கொண்டே எண்ணங்களும் அருவி போல சேர்ந்து ஓட தொடங்கியன ..,

வானத்தில் வானவில் வர்ணஜாலங்களை காட்டுவது போல் பனிப் பொழிவுகளுக்கிடையே மங்கைகள் அருவியை காண்பதற்காக கல்லூரி பேருந்திலிருந்து வந்தனார் , அதில் ஒரு சிறுமியை கண்டேன்! கல்லூரி படிப்பது போல் தோன்றவில்லை , உயர் பள்ளி மாணவி போல தோற்றம் , அவளது தோற்றத்திலிருந்தே அவள் வசதி படைத்தாள் இல்லை சொல்லமுடியும் என்று நினைத்தேன் , ஒரு ஆரஞ்சு நிற பவாடை கலர், பொருத்தமேயில்லாத அவள் தாயோடு புடவையில் சாயம் போய் என்ன! நிறம் என்று சொல்ல முடியாத ஒரு வகை சிவப்பு நிற தாவணி , கழுத்தில் நூல் கோர்த்து வெள்ளை பாசிமணிகள், இந்த முகத்துக்கு நகையே வேண்டாம் என்று ! சுடர் விட்டு பிரகாசித்த புரண்டு புரண்டு மின்னுகின்ற அவளது கரைபடியாத குழந்தை கண்கள் , அவளை பார்கின்ற யாருக்கும் எளிமையான உலகத்தில் எத்தனையோ விலையுயர்ந்த பொருட்கள் இல்லாத எளிமையோடு திகழும் இளவரசி மலையில் புதியதாக மலர்ந்துள்ள புக்ஷ்பம் தான் நினைவுக்கு வந்தது .
சித்தாப்பு .... என்று பிரசன்னா அழைத்தான் !
ஓடுகின்ற அருவியை அணைகட்டி நிறுத்துவது போல !
ஓடிய என் மனதை அந்த ஒலி நிகழ் காலத்துக்கு அழைத்தது
ஓடிய எண்ணோட்டங்களுடன் அடுத்த அருவியை அடைந்தோம் பாம்பர் அருவி(grand cascade) , கடுங்குளிர் மற்றும் மேகமூட்டங்கள் என்பாதல் நீராட முடியவில்லை நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தோம் , இதுவரை கடந்து வந்த பாதையால் எற்பட்ட களைப்பு இந்த அருவியில் காலை நனைத்தோம் , அந்த நொடியில் உடலில் பெரும் மாற்றம் இரத்த நாளங்கள் மின்னல்கள் போல் அங்கங்கே அருவி போல பாய்ந்து புத்துணர்ச்சியைடைந்தோம் , சில்லென்று பாதம் நனைந்ததில் உயிர் உறைந்தது , கொஞ்சம் நடுங்கினோம் ! இந்த கடும் குளிரில் வெகுநேரம் கால் நனைத்தால் “யாத்தே " என்று கால் உதறினேன் ...

(பயணம் தொடரும்)

1 Comments
அருமை..
ReplyDelete