**** காதலர் தினம் அன்று - ஒரு மலைப்பயணம்! பகுதி - 4

காதலர் தினம் அன்று - ஒரு மலைப்பயணம்! பகுதி - 4


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
                       
  வெள்ளியங்கிரி மலை பயணம்

இங்கு மேக மூட்டங்கள் சூழ்ந்து வெள்ளி வெள்ளியை உருகியதைபோல்  காட்சியளிப்பதால் வெள்ளியங்கிரி என்ற பெயர் பெற்றது . ஏழாவது மலை மீது செல்லும்போது நீர் மேக கூட்டங்கள் நம்மை தழுவி கடந்து செல்லும். வனங்கள் , சிறுவாணி ஆறு,என மனதை கொள்ளையடிக்கும் அழகு நம் கண்முன்னே விரிந்து நிற்கும் .
ஏழாவது மலை உச்சியில் தோரணக்கல் போன்ற இயற்கையான கோபுரவாசல் நம்மளை வரவேற்கிறது. 

இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழே அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி சுயம்பு லிங்கம் காணபடுகிறது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்கள் நீர், நிலம், ஆகாயம் , அக்னி, வாயு,பஞ்ச பூதங்களும் ஒருகிணைந்து பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற  பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இம்மலை கோவிலையடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மற்றும் பூரிப்பு முதலியவை  வர்ணிக்க இயலாது. ஏழு மலைகளை 
ஏறி வந்த கால்வலி , 
உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி  பஞ்சபூதம் 
அனைத்தும் பஞ்ச பூத ஸ்தலத்தை கண்டதும் 
அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனங்களும்
நம் கண்களை விட்டு என்றுமே நீங்காத நினைவுகளாகும்.


இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். பூலோக கைலாயம்
வெள்ளிமலை, தென்கைலாயம் ரசதகிரி,, என புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார்.  அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூஜை செய்து தரிசித்து திரும்பி வருவார்கள்.
பகத்த கோடி  அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். 
கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. நாரத மகாமுனிவர் , முனிவர்கள், தேவர்கள்,, சித்தர்கள், மற்றும் ஆதிசேஷன் இவர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.
தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் ஆன்மிக அன்பர்கள் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாக காட்சியளிக்கும்  ஈசனை தொழுதுய்ய வேண்டும்.

உமையவள் இறைவன் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். 
இத்திரு நடனத்தால் பல்கலை மேடை என்று அழைத்தனர் தற்போதையை பல காரமேடை என்று அழைத்து வருகின்றனர்.

இம்மலையை மனித உடலாக பார்த்தால் முதல்மலை பிரணவ சொரூபம் 'மூலாதாரம்' வெள்ளிவிநாயகர் உறைவிடம். இரண்டாம் மலை 'சுவாதிஷ்டானம்' பாம்பாட்டிச் சுனை. மூன்றாம் மலை 'மணிப்பூரகம்' அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை. நான்காம் மலை 'அநாகதம்' ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம். ஐந்தாம் மலை 'விசுக்தி நிலை' பீமன் களியுருண்டை மலை.ஆறாம் மலை 'ஆக்ஞை நிலை' சேத்திழைக்குகை, ஆண்டி சுனை. ஏழாவது மலை 'சஹஸ்ரஹாரம்' சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி ஆண்டவர்). வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.

                                                (முற்றும்) 

சுவாமிமலை தரிசனத்தை காண விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்

                                         👇👇👇👇







Post a Comment

1 Comments