**** முனியசாமி கோவில் கொடை விழா

முனியசாமி கோவில் கொடை விழா

            முனியசாமி | பைரவர்| பேச்சியம்மன்| சுடலைமாடசாமி  கோவில் கொடை விழா



வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 

கை கொடுப்பதற்கு மாறாக கை கூப்பலாமே 🙏🏼 - கொரோனா விழிப்புணர்வு






விடியலெனும் பூ வானில் மலர ஆரம்பிக்க அதில் ஒற்றை  மகரந்தமாய்  கம்பீர சூரியனின் உதயம் !

வெண்ணிற வண்டுகளால் மேகங்கள் அங்குமிங்கும் மிதந்து நகர்ந்ததில் ,வானம் நீலநிற பூந்தோட்டமாக விரிந்து தெரிந்தது .

என்னுடைய கைப்பேசி ரீங்கார ஓலமிட்டு கொண்டிருந்தது , தூக்க கலக்கத்தில் வேண்டா வெறுப்புடன் ! அந்த அழைப்பை எடுத்தேன் ! அன்று அழைத்தது என் நண்பன் முத்துக்குமார் .
அவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறான் .
வழக்கம்போல நலம் விசாரித்துவிட்டு ... என்ன விஷயம் என்று அவனிடம் கேட்டேன் .. கோயில் கொடை அடுத்த வாரம் உள்ளது என்றான் .....,, வளைகுடா நாட்டில் உடனே விடுமுறை கிடைக்காது என்று மனதுக்குள்  நினைத்துக்கொண்டு ! எனவே அவனிடம் உடனே வர முடியாது சொன்னேன் !! ....... கைபேசியை துண்டித்து பணிக்கு செல்ல தயாரானேன் ....,

நான் வளைகுடா நாட்டில் பணி புரிந்து வருகிறேன் , வழக்கம் போல  பணிக்குச் செல்ல தொழிற்சாலைக்கு பேருந்தில் சென்றேன் ,  செம்மறி ஆட்டுக்கு பின்னால் போவது மாதிரி ஒவ்வொரு பேருந்துக்கு பின்னால் போய்க் கொண்டிருந்தது ..., ஒரு ஆடு மட்டும் திசைமாறி செல்வது போல என் மனம் பயணிக்கத் தொடங்கியது ......

சென்னையில் வேலை செய்யும் நாட்களில் விடுமுறை எடுப்பது எளிது ! கோயில் கொடை வந்தால் இரண்டு நாள் முன்பே கிளம்பி விடுவேன் , அப்படி ஒருதடவை இரவில்  பேருந்தில் பயணித்தேன் .
பேருந்து என்றால் சராளங்கள் இருக்கும் சீட்டு தான் ! ஜன்னல் சீட்டு இல்லையென்றால் இறங்கியே விடுவேன் ,இப்படி காத்திருந்த காலங்களும் உண்டு ....
அப்படி  செல்லும்போது  கொளத்தூர் தாண்டுவதற்குள் மனசு எங்கள் ஊர் எல்லையில் இருக்கும் ..
 சாதாரண நாட்களில் கூட   போக்குவரத்து நெரிசல்க்கு குறைச்சல் ஒன்றுமில்லை !! ஒரு வழியாக கொளத்தூர் தாண்டினால் பெருமூச்சு விடுவேன் ..!! என்னடா கொடுமை இது...! என்று அரசாங்கத்தை மக்கள் மனநிலையை புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறது ….என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தது உண்டு ...!
  என் சொந்த ஊர் தூத்துக்குடியை அடைந்ததும் பூங்காற்று முகத்தில் வருடியது .

எங்கள் தெருக்களில் ஜனங்கள் ஒன்றாக கூடுவது இரண்டே விசேஷத்துக்கு தான் ..!!ஒன்று பத்து நாளுக்கு நாட்களுக்கு ஒரு முறை வர தண்ணிக்கு சண்டை ..!இன்னொன்னு கோவில் கொடை....! பக்கத்து வீட்டு அக்கா வின் அப்பாதான் கோயில் கொடைக்கு 75 வீட்டுக்கு வரி வசூலிப்பவர் .., ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு விதமான வரி ,, பையனுக்கோ , பெண்ணுக்கோ ,  திருமணம் ஆகிவிட்டால் ரெட்டை வரி ; 25  வயசுக்கு மேல பையன் இருந்தால் ஒன்றரை வரி ; அவளுடைய அப்பா மீசையை போல புருவ கட்டு ; கம்பளிப்பூச்சி கத்தரித்த மாதிரி மீசை கட்டு ; வெள்ளை வேட்டி சட்டை .., முழுக்கை சட்டை  அரைக்கையாக போட்டிருப்பார்…




அப்போதெல்லாம் கோயில் கொடை சித்திரை மாசம் தான் !  எங்களுக்கு மூன்று நாள் கோயில் கொடை ! கோயில் கொடைக்கு தெரு முழுக்க பந்தல் போடப்பட்டிருக்கும்.., ஒவ்வொரு கம்பத்துக்கு இடையில் மின் விளக்குகளும் ,கோபுர மாதிரி தொடர் மின் விளக்குகளும் ,அலங்கரிக்கப்பட்டிருக்கும்..
கோயில் கொடை நாட்களில் வெளியிலிருந்து வந்து கடை போடுவார்கள்.,
காப்புக்கட்டு நாட்களிலிருந்து கோயிலுக்கு முன்னால் திரைக்கட்டி கடவுள் சம்பந்தமாக திரைப்படங்களும் .., வில்லுப்பாட்டு 4 நாளும் நடைபெறும் . இதை பார்க்க பக்கத்து தெருக்களில் இருந்து ஆட்கள் வரும் …,
வாலிபர்கள்  இரவெல்லாம் கட்டை விளையாட்டுதான் ! அதான் சூர்யா லைலா காசு வைத்து விளையாடுவார்கள் அந்த விளையாட்டுதன் ! எப்போது கைபேசி தொலைக்காட்சி வந்ததோ எல்லாமே குறைஞ்சு போச்சு ….!
சாமியாடுபவர்கள் ---


பேச்சியம்மன் --- கணேஷன் ; சுடலைமாடசாமி ---- முத்துபாலகிருஷ்ணன் ; முனியசாமி --- பேச்சிமுத்து ; கொம்ப மாடசாமி --- பேச்சிமுத்து ; பைரவர் --- வீமன் .

வெள்ளி கிழமை அன்று திருவிழா காலை 08 மணிக்கு தீர்த்தகரை ; செல்லும் போது மொத்த தெருவும் சேர்ந்து சாமிய வழியனுப்புவர்கள் ..,தீர்க்கரையிலிருந்து திரும்பி வந்த சாமிய மஞ்சள்நீராட்டு விழா நடத்துவார்கள் ; திடிரென்று சாமி வரும் …..வந்த சாமிய பாட்டுப்பாடி ..,அப்போப்போ சாமிய நிற்பாட்டி குறி கேட்பார்கள் ..,,, மற்றும்
அன்றைக்கு யார் பிள்ளைகள் உடம்பு சரியில்லாத இருக்கோ  ! தாயோ , தகப்பனோ பிள்ளையை மடியில வச்சி ! செம்புல வேப்பகொழைய மஞ்சத்தண்ணில ஊறப்போட்டு .., கண்ணைமூடி “முணுமுணுமுன்னு “ எதோ சொல்லி பச்ச பிள்ளை முஞ்சிச்சில தண்ணி தெறிக்க அடிச்சுது சாமி ! அதுல உண்மை என்னன்னென ! இந்த சாமிங்கிற புது பயத்துல பழைய பயம் ஓடியே போயிரும் …, பதினைந்து வருடத்திற்கு முன்னால எங்களுக்கு இந்த கோவில விபுதி அடிச்ச அனுபவம்தான் ..! அதுல ஒரு அண்ணன் ஏல சாமி ஜாதி பார்த்துத குறி சொல்லுமல…., என்னையல கண்ணனுக்கு தெரியதால….., ஏல அகராதி பிடிச்ச பையலே ! ஓரமா கூட்டிட்டு போங்கலா அவன …, மிருகத்துக்கு , சாமிக்கு எப்படி ஜாதி தெரியும் ! இந்த மாதிரி பெரியவர்கள் சேர்ந்து வாயடையப்பார்கள் ..,இந்த நிகழ்வுக்கு இடையில அன்னதானத்துக்கு ஒரு கூட்டம்…,
பொண்ணுக 31 நாட்கள் விரதம் இருந்து அன்று மாலையில் முளைப்பாரி எடுப்பார்கள் …, செடி வளர்ந்தாலும் ..,வளரவிட்டாலும் அண்ணாமார்கள் கேலிக்கும் கிண்டல்களுக்கும் பஞ்சமே  இருக்காது ! இதற்கிடையில் தன் காதலிக்காக காதலன் முளைப்பாரி வளர்த்து கொடுப்பார்கள்  ! அவங்க காதல் சின்னம் முளைப்பாரி ! இந்த காதல் கவியத்துல கரை சேர்ந்தவர்களுண்டு .., சேராதவர்களுண்டு …, சந்திப்பார்கள் அடுத்த கோவில் கொடையில் பிள்ளையுடன்…!

அடுத்து சாமக்கொடை எங்கேயிருந்துதான் வந்ததோ அவ்வோளோ ஜனங்கள் வரும் …,!11.30  மணிக்கு
பாலன் ,மீளி , மறவோன், திறவோன் ,விடலை, காளை ;முதுமகன்பேதை ;பெதும்பை ;
தெரிவை ;பேரிளம்; மடந்தை ;அரிவை மங்கை ;;;இத்தனை பருவங்களும் புது ஆடையில் வருவார்கள் ..,
வில்லு பாட்டை வயதானவர்கள் மட்டும் பார்ப்பார்கள் : கணியன் பாடுவங்க …..மீண்டு சாமி வரும் ….இடையிடையில் குறியும் கேட்பார்கள் சிலர் பயபக்கத்தியுடன் .., அண்ணாமார்கள் ஒரு வித நக்கலுடன் பார்ப்பார்கள் .., சாமக்கொடை இடுகாட்டுக்கு போய்ட்டு வந்த சாமி, தெருவில்லுள்ள அத்தனை வீட்டுக்கும் போவார்கள் மஞ்சள்நீராட்டுக்காக !
மறுநாள் நேர்த்திக்கடன் (கிடா வெட்டு )ஆடு , கோழி தான் ராஜாக்கள் ! அடுத்து படைப்பு சோறு சாப்பிடும் போது அந்த கறியெலும்பு அடித்தொண்டையில கடிக்கிற  கடி எட்டு தெருவுக்கும் கேட்க்கும் ..,!
இந்த நிகழ்வையெல்லாம் அசை போட்டுக்கொண்டே வழிமாறி சென்ற ஆடு …,மீண்டும் செம்பறியாடுக்கு பின்னால் வந்தது மனம் ……

நன்றி.!





Post a Comment

1 Comments