**** ராமன் தேடிய ராவணன் - பகுதி- 5

ராமன் தேடிய ராவணன் - பகுதி- 5

 

ராமேஸ்வரம் பயணக்கட்டுரை


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 

காலத்திடமிருந்து கடன் வாங்கியவனை காலம் மறந்து விடுகிறது ...! 

காலத்திற்கு கடன் கொடுத்தவனையே அது தன் கவனத்தில் வைத்திருக்கிறது 


மனித
வாழ்க்கை‌யிங்கிற பயணத்தில் மேடு பள்ளம் இருப்பது போல இங்கே
மணல்மேடுகள்.
ராமர் பாதம் நோக்கி பயணம் செய்தோம்.

பாதை - காட்டுப்பாதை.

 பாதையெங்கும் கருவேலமரங்கள்...,

லட்சுமணன் கோட்டுக்கு வெளியே ராவணன் சீதையை இழுத்த மாதிரி ஆங்காங்கே புறா கண்ணிகள்.

மனுஷன் வாழ்க்கை வட்டம் மாதிரி..!
வட்டத்துக்குள் வெளியே வந்த பறவை...!
பறவை வாழ்க்கையும் வட்டம் மாதிரிதான்..! 
வட்டத்துக்குள் உள்ளே வந்தா மனுஷன்..!

 புறாவுக்கு கண்ணிகளை பார்த்து கொண்டு பயணத்தை மேற்கொண்டோம்...,

 குறுக்கு வழியில்லாமல் அறவழியில் பயணம் செய்தோம்...,

 நாம் அனைவருமே அறவழியில் பயணம் செய்ய பயப்படுகிறோம்.

 உதாரணத்திற்கு ஸ்ரீராமர் வனவாசத்தில் கஷ்டப்பட்டார்...!
 அயோக்கியர் சுக வாழ்வு வாழ்கிறார்கள்...

 என பலர் சொல்கிறார்கள் ...

சொல்வதை விட புலம்புகிறார்கள்...

 இது எல்லாம் பிசகு...!
 மாய பிம்பங்கள்.

ஸ்ரீராமர் கஷ்டப்பட்டார் என்று உங்களுக்கு யார் சொன்னது....?

 அவருக்கு நேர்ந்த சோதனைகளை துன்பங்கிற 
கண்களால் பார்க்கிறார்கள்...!
 
நெருப்புக்கு காகிதம் அஞ்சுமா..??

 இல்லை தங்கம்தான்  பயப்படுமா???

 அறவழியில் பயணத்தால் வரும் அனுபவங்களை துன்பம் என்று புலம்பாதீர்கள்....!

ஐப்பசி மாதம் போல - ஆடையில் ஈரம் வடிய வடிய  துன்பமும் வடிந்தே தீரும் ..!


இடுக்கண் வருங்கால் நகுக ; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில் . 

என்றார் வள்ளுவர் ..

எல்லா துன்பங்களையும் நிரந்தரமாக யாவருக்கும் கடவுள் வழங்கியதில்லை...

 இவ்வாறு மனதில் அசைப் போட்டுக் கொண்டு  ராமர் பாலத்தை அடைந்தோம்..., ராமர் பாதம் அது குன்றின் மீது உள்ள ஒரு சிறிய மண்டபம்..,

ஏறினோம் படிகளைக் கடந்து 

காலு ஏறுது படியை நோக்கி..!

 மனசு ஏறுது மலையை நோக்கி...!

 கடத்தப்பட்ட சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல  திட்டம் தீட்டிய இடம்தான்...!
 இந்த படைவீடு கந்தமாதன பர்வதம்
(ராமர் பாதம்).





குன்றிலுள்ள மண்டபத்தில் இருந்து புற கண்களால்  பார்த்தால்...! பாம்பன் பாலம் - கலங்கரை விளக்கம் மற்றும் 
 தீவு முழுவதும் தெரியும்..! 

ஆனால் குன்றிலுள்ள மண்டபத்தில் இருந்து அக கண்களால் பார்த்தால் ..! 
சீதையை கடத்தி சென்ற இராவணன் என்கிற - 
துன்பம் சிறிய புள்ளி ஆக 
தான் தெரியும் ..! 
அந்த துன்பத்தை பக்கத்திலிருந்து பார்த்தால்  பத்து தலை இராவணன் போல தான் தெரியும் ...!


கண்களை மூடிக் கொண்டு யோசித்து பார்த்தால் ..! 

ஒரு கணம் அப்படி என்றால் ...!
மற்றொரு கணம் இப்படி..! 




பயணம் தொடரும்.....









Post a Comment

1 Comments

  1. அருமையான பகிர்வு அண்ணா..

    ReplyDelete