வெள்ளயங்கிரி மலை டிரெக்கிங் பயணம் கோவையிலிருந்து எளிதில் செல்லும் வகையில் அமைந்துள்ளது. பகல் / இரவு
நேரத்தில் தொடங்கும் மலையேற்றம் பற்றி தகவல்களைத் தெரிந்து கொள்வோம் வாங்க 🙏🏼🙏🏼
கொங்கு நாட்டின் தலைநகரமான கோயம்பத்தூர் தொழில் நகரம் என்பதனை தாண்டி தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் நகரமாகவும் இருக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவினாசியில் உள்ள அவிநாசியப்பர் திருக்கோயில், முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் மருதமலை முருகன் கோயில், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில், கோனியம்மன் கோயில் போன்ற பழமையான ஆன்மீகத் தலங்கள் கோவையில் அமைந்திருக்கின்றன. இவ்வரிசையில் கோவையில் தமிழகத்தின் மிக முக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்கழி மாதத்தில் புனித தென்கைலாய வெள்ளியங்கிரி மலை பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தாலும், இப்பொது தான் அந்த அனுபவத்தை கட்டுரையாக எழுத இறைவனால் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தரையிலிருந்து கிட்டத்தட்ட 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த வெள்ளயங்கிரி மலைக் கோவில். இந்த கோவிலுக்கு செல் வதற்காகவே இந்த மலையில் ஏறி செல்கின்றனர் பக்தர்கள். சாகச விரும்பிகளும் இந்த மலை ஏற்றத் தை மிகவும் விரும்புகின்றனர். ஒரு இரவில் ஏறி விட முடியும்,. பகல் நேரத்தில் அதிக அளவு வெப்பத்தால் ஏறுவது மிகக் கடினமாகும். இரவு நேரத்தில் கடும் குளிரும் இருக்கிறது. எனவே தகுந்த பொருள்களோடு செல்வது சிறந்தது.
எப்படி செல்வது?
கோயம்புத்தூரின் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. ஒரு மணி நேர பயணத்தில் நாம் மலை அடி வாரத்தை அடையமுடியும்.
வெள்ளயங்கிரி சிவன் கோவில்
வெள்ளயங்கிரி சிவன் கோவில் அருகாமையில் இருக்கும் பெரும்பாலான சிவ பக்தர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.
வெள்ளயங்கிரி சிவன் கோவில் அருகாமையில் இருக்கும் பெரும்பாலான சிவ பக்தர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.
கடும் பனி. காதல் தினம் அன்று காலை ஐந்தரை மணிக்கு கோவையில் இருந்து நான் கிளம்பினோன் ,செல்லும் வழியில் எதிர்ப்பட்ட ஆலயங்களில் மார்கழி மாத காலை பூஜைகள் நடந்து கொண்டிருக்க, வழியில் பல இடங்களில் பஜனை ஊர்வலங்கள் சென்றுகொண்டிருக்க அதை பார்க்கும் போது ‘மாதங்களில் நான் மார்கழி’ என்ற கண்ணனின் வார்த்தை நினைவில் வந்தது. ‘ஓம் சிவாய நம’ என்ற பஞ்சாச்சர மந்திரத்தை மனத்தால் உச்சரித்து வெள்ளியங்கிரி மலையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.
இம்மலையில் மொத்தம் ஏழு சிகரங்கள் உள்ளன. ஆறு கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை பார்த்துவிட்டு, அங்கே அருகிலுள்ள இடங்களில் சில நிமிடங்கள் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டும் பயணிக்கலாம்.
காலை 6:30 க்கு மலை அடிவாரத்தை அடைந்தோனன் மற்றும் அடிவாரக் கோயிலை நோக்கிச் சென்றோன். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் நாலு அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவச் சிலை மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
கோவிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன ராசித் தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் ஒன்பது தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் பன்னிரண்டு ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர். அனைவரையும் வழிபட்டு மலையேற அனுமதி வாங்கினோன். கோவிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. மலையின் மேல் செருப்பு அணியாமல் தான் ஏறவேண்டும்
மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலை ஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு மலை பயணத்தைத் தொடங்கினோன். மலை அடிவாரத்தில் இருக்கும் சாமியார்கள் பலர் இல்வாழ்க்கையை ஒதுக்கி, துறவறம் பூண்டவர்கள். அங்குள்ள சாமியார்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள். அவர்கள் கூட்டமாக அமர்ந்து தேவாரம், திருமுறைகள் போன்ற பாசுரங்களைப் பாடிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் முன்னர் ஒரு திருவோடும், கற்பூரத் தட்டும் இருக்கும். பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கையை இட்டு நமஸ்காராம் செய்தால் ஆசிர்வாதம் செய்வார்கள். காணிக்கை இடாவிட்டாலும் அவர்கள் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். குடும்பம் மற்றும் சொந்த பந்தங்களுடன் வருவோர் அங்கு சமைத்து இவர்களுக்கு அன்னதானம் இடுவார்கள். இவர்களும் அவர்களுடன் பூஜைகள் செய்து அவர்களை ஆசிர்வாதம் செய்வார்கள். அவர்கள் மலைப் பயணத்தின் போது கடைப்பிடிக்கும் சில அறிவுரைகள் கூறுவார்கள்.
மலை ஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப வேண்டும் என்று குழுவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும்.
குரல் மற்றும் தொண்டை சரியில்லாததால் அதிகமாக நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இவர் கடும் மன உறுதி உடன் இந்த தடைகளை எல்லாம் தவிர்த்து வெள்ளிங்கிரி ஆண்டவனை தரிசிக்க வேண்டும் என்று வைராக்கியமுடன் மலை ஏறத்தொடங்கினேன்.
முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் அரை அடி முதல் ஒரு அடி வரை செங்குத்தானவை. இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த காலை நேரத்திலும் வியர்வை கொட்டும். மலை ஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு இருக்கும் விநாயகர் கோவில் வெள்ளை வர்ணம் உடையதாலும், பிள்ளையார் முழுக்க விபூதி பூசப்பட்டு, வெள்ளையாக காட்சி தருவதால் வெள்ளை விநாயகர் கோவில் என்று அழைக்கப் படுகின்றது. இந்தக் கோவிலை அடைவதுதான் நம் பயணத்தில் மிகவும் கடினமான பகுதி. நாங்கள் விநாயகர் கோவிலை அடைந்தோம் அங்குள்ள வெள்ளைவிநாயகருக்கு நெய்தீபம் இட்டு வணங்கினோம்.
சிறிது நேரம் ஓய்விற்குப் பின் இரண்டாம் மலை பயணத்தை ஆரம்பித்தோம். இந்த மலையில் ஒருசில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் பகுதி, இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சித்தர் குகை மற்றும் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.
நாங்கள் பாம்பாட்டி சித்தர் குகையை அடைந்தோம், அங்கு குகையினுல் இருந்த சிவலிங்கத்தை வணங்கிய பின்பு சுனையில் வரும் மூலிகை நீரை நாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் பிடித்து குடித்தோம் அப்போது வலுவிழந்த நிலையில் உள்ள எங்கள் உடல் வலிமை பெற்றது.. சுனையில் தண்ணீர் வரும் பாறையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் பாம்பு சீறுவதைப் போல உஷ், உஷ் என்ற சத்தம் கேக்கும். ஆதலால் இதுக்கு பாம்பாட்டி சுனை என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். செல்லும் வழியில் இந்த இயற்கையான ஊற்றுக்கள் மூலம் வரும் நீர் மூங்கில் தப்பைகள் கொண்டு வடிந்து கொண்டிருக்கும். அந்த நீர் தேன் அமிர்தம் போல இருக்கும். அருவிகள், பறவைகளின் ஒலிகள், வனச்சூழல் நம்முள் இனம்புரியாத மாற்றத்தை ஏற்படுத்தும். செல்லச் செல்ல வனங்களின் அழகு, குரங்குகளின் விளையாட்டு மனதை கொள்ளை கொள்ளும். மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுகிறது. சுவாசக் குழாயும், சுவாசப் பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது.
(அடுத்த வாரம் பதிவேற்றப்படும்)



1 Comments
அருமை அண்ணா..
ReplyDeleteஎனக்கும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல ஆசை உள்ளது.தங்களின் இப்பதிவு எனக்கு மிகவும் உதவும்..