**** தன்னம்பிக்கை திவ்யா - பகுதி -1

தன்னம்பிக்கை திவ்யா - பகுதி -1

 தன்னம்பிக்கை திவ்யா 

வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


இக்கதையில் வரும் அனைத்தும் அரசியல்வாதிகள் போல் சில கலப்படம் உள்ளது ..,
“கற்றதை கற்றுக் கொடு" பழமொழி நாம்யாறிவோம் ! எனக்கு தெரிந்ததை இதோ  உங்களுக்கு தேவையான பயன்யுள்ள தகவலிருந்தால் எடுத்து கொள்ளுங்கள் .... 


இளங்காத்து வீசுதே ! இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைன்ஞ்சு ஓடுதே ! என்று வானொலில் ஒழிக்க ,



இளங்காற்று மிதமாக வீசிக் கொண்டிருந்த மாலை பொழுதில் திவ்யா தன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தலைவாரி கொண்டிருந்தாள் , காற்று சற்று
அவள் கூந்தலை தீண்டி செல்லும் போது காட்சியை கண்டால் , மழலை முதல் பல் எட்டிப் பார்ப்பது போல அவள் வளர்த்த ரோஜா செடியில் முதல் மொட்டு எட்டி பார்த்து சிரித்தது , இளங்காத்தில் அந்த ரோஜா மணம்  திவ்யாவின் நாசியை தீண்டி அழைத்தது , அவள் அருகே சென்று அந்த பூவை தடவி பார்த்தால் பிறந்த குழந்தை இருந்தது போல் உணர்வு அவளுக்கு தோன்றியது , பின் அதை நுகர்ந்து பார்த்தால் அந்த மணம் அவளை பரவாசப்படுத்தியது , திவ்யாவும் உல்லாசமாக இருந்தாள், அதே நேரத்தில் குயில்கள் தன் வீட்டை அடைந்த்தது 
ரோஜா செடி அருகே உள்ள மாமரத்தில் அமர்ந்து குயில்கள் கூ ..கூக்கு ... என அவளை அழைத்தது , மழலை மொழி யாருக்கும் அறியாது இது இயற்கை அவளுக்கு வீதி விலக்குல்ல , ஆனால் அந்த அழைப்பு இசையை அவள் ரசித்தாள் , இந்த சூழலில் அவள் மனம் இழகுவானது , அதற்கு காரணம் அன்று பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் , கடந்த நாளை எண்ணி மனதில் அசைப் போட அரம்பித்தால் , நாமும் திவ்யாவுடன் செல்வோம் , 

திவ்யா இயற்கையாக அமைதி குணம் உடையாவள் , பிறர் சத்தமாக பேசினால் கூட அவளுக்கு நடுக்கம், பயம் , தயக்கம் அனைத்தும் அவள் தோழிகள் எப்போதும் கூடவே இருப்பார்கள் , இதனால் மற்ற மாணவர்கள் மத்தியில் ஒன்றும் தெரியாதது போல் 
தனித்துருப்பாள் , அவள் தோழிகள் கேழியும் , கிண்டலுக்கும் அவளுக்கு பஞ்சமில்லை , மதிய உணவு இடைவேளைக்கு பின் விஜி என்ற
அறிவியல் ஆசிரியர் வாருவார்கள் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருன்ந்த வேளையில் டேவிட் என்ற கணக்கு ஆசிரியர் வந்தார் , நாளை கணக்கு தேர்வு என்பாதால் கணக்கு பாடத்தை முடித்த பிறகு அறிவியல் தொடரலாம் என்று ஆசிரியர்கள்குள் ஒப்பந்தம் ,





 அதன்படியே வகுப்புகள் நடைப்பெற்றது , ஒவ்வொரு மாணவ , மாணவிகளிடையே வாய்ப்பாடுகள் கேட்க்கப்ப்ட்டன , திவ்யாவிடம் பன்னிரெண்டாம் வாய்ப்பாடுகள் கேட்க்கப்பட்டன , அவளுக்கு நன்றாக தெரிந்துருந்தாலும் அவாளால் கூறமூடியவில்லை காரணம் அவள் பயம் என்ற 
தோழி தான் காரணம் , சற்று தயங்கிய நிலையில் எழுந்து நின்று அந்த மெல்லிய குரலில் சொன்னாள் , ஆசிரியர் மதியனம் உணவு உண்ணவில்ளையா என்று திட்டி சத்தமாக சொல் என்று கூறினார் , அவள் சொல்ல முடியாமல் தடுமாறினால் , சக மாணவார்கள் கூச்சலிட தொடங்கினார் , கடும் கோபம் கொண்ட ஆசிரியர் சரமாரியாக திவ்யாவை திட்டினார் , அதை கேட்டுக் கொண்டிருந்த சக மாணவர்கள் ஏளமாக சிரித்தனர் , இந்த சம்பவம் அவளை பெரிதும் பாதித்தது , பள்ளி முடிந்தபின் வீட்டை அடைந்தாள் , இந்த சம்பவத்தை எண்ணி அவள் மனம் வெதுப்பியது , அம்மாவிடம் சொல்லாமா வேண்டமா என்று அலை பாய்ந்தது , தயக்கம் என்ற தோழி அம்மாவிடம் மறைத்தது , இரவு வெகு நேரம் ஆகியும் அவளால் உறங்க முடியவில்லை , 

எல்லாம் தெரிந்த எனக்கு என்னால் ஏன் கூற முடியவில்லை என்று அவளுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பியன , கண்ணிர் அவள் படுக்ககையை நனைத்தது , மறு நாள் விடிந்தது அவளால் கண் விழிக்க முடியவில்லை  சிரமப்பட்டு கண் விழித்தாள் ,  நீர்யில்லாத குளம் போல் அவள் கண் சிவந்துருந்தது , அதை பார்க்க கோவைப்பழ போல் தெரிந்தது , படுக்கையிலிருந்து எழுந்து குளியலைக்கு சென்று வாளியில் உள்ள நீரை  இரண்டு கையால் அள்ளி தன் முகத்தை கழுவி கொண்டாள் , கொடியிலிருந்த துண்டை எடுத்து துடைத்த பின் அவள் அம்மாவை தேடினால் , 

அம்மா ..... அம்மா ..... இங்கே தான் இருக்கேன் திவ்யா .... என்று அம்மாவின் குரல் தோட்டத்திலிருந்த்து வந்த்தது ., திவ்யா நேராக அம்மாவிடம் சென்று கட்டிக் கொண்டாள், அவளுக்கு என்ன நேர்ந்தது அறியாத  அம்மா அவளை அணைத்து முத்தமிட்டாள் , நீ போய் குளித்துவிட்டு வா நான் தலைவாரி விடுகிறேன்  பள்ளிக்கு செல்ல தயாராகு என்றாள், திவ்யா அம்மா கட்டிக் கொண்டு நான் பள்ளிக்கு போக விருப்பமில்லை என்று மறுமொழி கூறினாள் , அம்மா செடிக்கு தண்ணீர் பாய்ப்பதை நிறுத்தி ஏன் ?? என்ன ?? ஆயிற்று என்று கேள்விகளை அடுக்கினால் , தயக்கம் என்ற தோழி மீண்டும் வந்தாள் , ஏதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள் ,  இதை கவனித்த அம்மா அவளை மீண்டும் அனைத்து என்னிடம் மறைக்காமல் சொல் !!!  தைரியாமக சொல் !! என்று கேள்விகளை  எழுப்பினால் , 
திவ்யா அப்போது தான் தயங்கி தயங்கி வாய் திறந்தால் ,, அம்மா .. அம்மா.. அது வந்து ..... என இழுத்தால் , .......ம் சொல்லும்மா .... என்று மீண்டும் கேட்டால் ,  நேற்று கணக்கு ஆசிரியர் வாய்ப்பாடு சக மாணவரிடமும் , என்னையும் எழுப்பி  கேட்டார் ... பிறகு என்ன நடந்தது என்று அம்மா கேட்டால் , 
என்கிட்ட பனிரெண்டாம் வாய்ப்பாடு கேட்டார் ..
நீ சொன்னியாம ...
இல்லம்மா...
ஏன் சொல்லவில்லை உனக்கு தான் தெரியும்ல ... அப்போ ஏன் சொல்லால ...
எல்லார் முன்னாடியும் நின்னு சொல்ல பயம் ! 
தப்பாக  சொல்லிர்வனோ என்று 
பயம்  தப்பாக சொல்லி மத்தவங்க பார்த்து சிரிப்பங்களோ என்று தயக்கம் அதான் சொல்லவில்லை அம்மா என்றாள் ,,,,

                                                         ( தயக்கம் தொடரும்)  








Post a Comment

1 Comments