**** காதலர் தினம் அன்று - ஒரு மலைப்பயணம்! பகுதி - 3

காதலர் தினம் அன்று - ஒரு மலைப்பயணம்! பகுதி - 3

வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼


நான் செல்லும் வழியில் சிலர் சிவப்புராணம் கூறிக் கொண்டு வந்தனார்

“அவனருளாலே அவன்தாள் வணங்கி 
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் ஓய உரைப்பன் யான்’

இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால்தான் முடியும்.
அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு வழி காட்டுகிறது



இந்த சூழ்நிலையில் பஞ்சாச்சர மந்திரமே  ( ஓம் நமசிவாய -திருவைந்தெழுத்து) துணையாக இருந்தது, அடுத்து ஆறாவது மலையை அடைந்தேன், இதை சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான்.
 இங்கே மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் , வாசனைப் புற்கள், மிளகு பலாமரம் , கற்பூர வல்லி, போன்ற அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது,



ஆண்டி சுனை

நான் உடல் சோர்வடைந்த நிலையில் நீராட போகிறோம் என்ற உற்சாகத்தில் ஆண்டி சுனையை அடைந்தேன். இங்கே வியர்வை எல்லாம் போகிற மாதிரி ஒரு காக்கா குளியலை போட வேண்டியது தான்.ஆண்டி சுனை என்பது காட்டுக்குள் இருந்து ஓடிவரும் காட்டாறு. இது மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளமாகவும், நாம் போகும் நேரங்களில் சிறு வாய்க்கால் போல விளங்கும். இதில் இந்த இடத்தில் அதனுடன் பாறைகளுக்கு அடியிலும் நீர் சுரக்கும். மிகவும் குளிர்ந்த நீர். தண்ணீர் அதிக ஓட்டம் இல்லாமல் தடுத்து நிறுத்தி இருப்பதால், மிகவும் குளிர்ந்து,அப்பத்தான் குளிர்சாதன பொட்டியில் இருந்து எடுத்த தண்ணீர் போல இருக்கும்.
கோவில் குளத்தில்   இறங்கும் முன்னர் நாம் கொஞ்சம் தண்ணீரைக் கை, கால்களில் நனைத்துக் கொள்வோம்,  ஏன்? உடல் சமவெப்பனிலையைடைய அதே போல் தான் இந்த ஆண்டி சுனை குளிக்கலாம்.  அப்படியில்லாமல்  எடுத்தவுடன் தண்ணீரில் முங்கினால், விறைத்துக் கூடப்போக வாய்ப்புருக்கிறது. அதிக ஆழம் இல்லாமல் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர் இருக்கும். 

நல்ல சுவையான தண்ணீர், இதன் ஓரங்களில் நிற்கும் போது கவனமாக நிற்க வேண்டும் ,  சுனையில் தண்ணீர் பிடிக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சுனையில் அட்டைப் பூச்சிகள் அதிகம். கடித்தால் தெரியாது. ஆனால் காயம் ஆறுவது மிகவும் சிரமம்.  
தீப்பெட்டி சுண்ணாம்பு, எடுத்து செல்வது நல்லது.தீக்குச்சி சூட்டுக்கும் சுண்ணாம்பு தடவினாலும், தான் கடிக்கும் அட்டைப்பூச்சி நம் உடலை விடும். நான் பகல் பதினொன்றரை மணிக்கு குளித்ததால் அந்த பயம் இல்லை. குளித்தபின்பு உடலும் மனமும் புத்துணர்வு அடைந்தது.







இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். ஏழாம் மலை ஏற்றம்..மிக மிக கடினமே. முதலில் அந்த டீக்கடை தாண்டிய பிறகு,செங்குத்தான ஏற்றம் ஆரம்பம்.இடையினையே கற்களால் ஆன பாறைகளினுள் செல்ல வேண்டும்.மழை பெய்த ஈரத்தில்,கால் வழுக்க ஆரம்பித்தது.அங்கங்கே ஆசுவாசப்படுத்தி,ஏறலானோம். ஒரு மூன்று மடங்கு ஏத்தம் இருக்கும். உடல் சற்று தளர ஆரம்பித்தது.






(தரிசனம் தொடரும்)

Post a Comment

1 Comments