**** சிட்டுக்குருவி கட்டுரை

சிட்டுக்குருவி கட்டுரை



சிட்டுக்குருவியின் கட்டுரை 

அன்பான வாசக பெருமக்களே 🙏 

 உங்களுக்கு ஒரு வேண்டுகோள்  ! சிட்டுக்குருவியை பாதுகாக்கவும் மற்றும் காப்பாற்றவும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்கூறுங்கள்....
 இந்த கட்டுரையை வாசித்த பின் அனைவரும் இன்றைய தினத்திலிருந்து சிட்டுக்குருவியை  காப்பாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் ! என்ற நம்பிக்கையில் இந்த பயணத்தை தொடர்கிறேன் ....!

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்தேன் ! சிட்டுக்குருவி ..... சிட்டுக்குருவி... செய்தி தெரியுமா..!! என்ற பழைய சினிமா பாடல்கள் உண்டு... இப்போது சிட்டுக் குருவியே ஒரு செய்திதான் ! அதுமட்டுமில்லாமல் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினம் என்று கொண்டாடுகிறோம் ..., ஏன் ? எதற்கு ? கொண்டாடுகிறோம்..., 2000 வருடத்திற்கு முன்பு அதிக எண்ணிக்கை காணப்பட்டது ,தற்போது வெறும் 50% மட்டுமே மிக அபூர்வமாக காணப்படுகிறது ,

இதற்கு காரணம் போதிய உணவு  கிடைக்காதது , கூடு கட்ட இடமில்லாமல்  சிட்டுக்குருவிகள் மறைந்து வருவதாக தகவல்கள் ..., இப்படியே சென்றால் வரும் தலைமுறைக்கு சிட்டுகுருவியை இணையதளத்தில் தான் .. காண்பிக்க வேண்டும் ... இந்த இப்படியே நிலைமை நீடித்தால் நம்மை விட்டு பிரிந்து போய் விடுமோ!! என்ற அச்சம்   மனதில் உதயமாகிறது .

சில வருடத்துக்கு முன்னர் எங்கள் தெருக்களில் கூரை வீடுகளும் , ஓட்டு வீடுகளும்  அதிகம் இருந்தன , தற்போது  காங்கிரீட் வீடுகள் அதிகமானதால் சிட்டுக்குருவியின் இனம் அழிந்து வருகின்றன இதுவும் ஒரு காரணம் ! , எங்கள் தெருவில் வசித்த ஒரு முதியவர் சிட்டுக்குருவியை பிடிப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும் .
ஒரு சிறு மூங்கில் குச்சி மற்றும் மூங்கிலால் பின்னப்பட்ட  முறம் (சோலவு) இதற்கிடையில் நெல் காயப் போடப்பட்டிருக்கும் ! அந்தக் குச்சியின் நூலைக் கட்டி மறு முனையில் நூலின் நுனியைப் பிடித்து கொண்டு உட்கார்ந்து இருப்பார் , நெல் சாப்பிட வரும் சிட்டுக்கருவி சரியாக கீழே அமர்ந்து ; சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நூலை இருப்பார் இழுப்பார் உடனே 
முறம் சிட்டுக்குருவியை மூடிவிடும் பின்னர் சிட்டுக்குருவியை பிடிப்பார் ..., 
நாங்கள் வளர்ந்த பின்பு ! பள்ளி விடுமுறை காலங்களில் எனது நண்பன் கிணற்றில் இறங்கி பொந்துக்குள் இருந்து குருவி குஞ்சுகளை எடுப்பான் , காக்கா குஞ்சுயாக
இருந்தால் மண்டை பழுத்துவிடும் !சிட்டுக்குருவி வலிமை கிடையாது !தொடர்ச்சியாய் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும் .

இந்த சிட்டுக்குருவி புராணம் சொன்னவுடனே சிட்டுக்குருவி அழிவிற்கு அச்சாரம் என முடிவு செய்திருப்பீர்கள் !இருக்கலாம்.

சிட்டுக்குருவி அதிகம் காணப்படுவதால் என்னவோ ! அதன் மீது கவனம் இல்லாமல் போய்விட்டது.

இக்காலகட்டத்தில் சிட்டுக்குருவி கூடுகட்ட எங்கேயாவது ? ஏதாவது ? ஒரு சிறு இடம் கிடைத்தால் போதும் என்ற பரிதாப  சூழ்நிலை உள்ளது .

சிட்டுக்குருவிகளை காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் ! 
இந்த சூழ்நிலையை மாற்றும் முயற்சியில்  என்னுள் தேடுதல் உதயமானது , பின்பு house sparrow do it yourself (DIY)  என்ற தலைப்பில்  YOUTUBE வீடியோ மூலம்  பார்த்து முயற்சி செய்தேன் .. ,  அதன் பலனை இரண்டே நாட்களில் அதிசயம் நடந்தது எதார்த்தமாக பார்த்தபோது ! நான் வைத்த உணவின் மூலம் வந்தது என்னைப்பார்த்ததும் பறந்தோடி விட்டன . மறுநாள் அதே இடத்தில் தண்ணீரும் சேர்த்து வைத்தேன் சொல்லிவைத்த மாதிரி சரியான நேரத்தில் காலையும் ,மாலையும் வரத்தொடங்கின , அது சாப்பிடுவதும் அழகு ! கொஞ்சி விளையாடுவதும் அழகு !  சிட்டுக்குருவியின் வசீகரிக்கும் சத்தம் ...என ரசிக்கத் தொடங்கினேன் ., இந்த நிகழ்வை எல்லாம்  பதிவு செய்ய ஒரு நாள் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தேன் .. இதோ உங்களுக்காக !







மனிதன் மனிதனுக்கே அடைக்கலம் தருவதற்கு யோசிக்கிற காலம் !
திருமணமான பின்பு தாய் தந்தைக்கு அடைக்கலம் தருவதற்கு யோசிக்கிற காலம் இது !இதில் எப்படி பறவைகளுக்கு கருணை காட்ட போகிறோம் ????


தெரிந்து கொள்ளுங்கள் !

  சிட்டுக்குருவியின் சிறப்புகள் :- 

பிறப்பு

 எல்லா இனத்தை போலவே சிட்டுக்குருவி களிலும் ஆண் , பெண் என இருவகை உண்டு

ஒரு வருடத்திற்கு 03 முறை முட்டையிடும் தன்மை கொண்டது , ஒவ்வொரு முறையும் 5 முதல் 6 முட்டைகள் இடும் .

மனிதர்களின் நீண்டகால துணையாக இருப்பது இந்த சிட்டுக்குருவி தான் ,இதன் வாழ்நாள் 13 ஆண்டுகள் எனக்கு கூடுதல் தகவல்.


சிட்டுக்குருவியின்அமைப்பு

சிட்டுக்குருவிக்கு அழகே அதன் சிறிய தலையும் ,அதன் இறகுகளில் இளஞ்சிவப்பு மற்றும் இளங்கருப்பு கலந்த நிறம் தான்.

ஆண் பெண் எப்படி வித்தியாசம் காண்பது ? 

ஆண் குருவிக்கு 
 இறகுகளில் கருஞ்சிவப்பு , கழுத்தில் கருப்பு நிறம் இருக்கும்.
பெண் குருவிக்கு வெண்மை நிற கொண்ட தலை முதல் வால் வரை இருக்கும் . கூடுதல் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட சிறு இறகுகள் அடர்த்தியாக இருக்கும் . 


சிட்டுக்குருவியின் உணவு

மனிதர்கள் உண்ணும் தானிய வகைதான் (கம்பு ,சோளம் , ராகி , ரவை  ) இந்த சிட்டுக் குருவிக்கும்.  தானியங்கள் இல்லையென்றால் சிறு புழு பூச்சிகளை உட்கொள்ளும் .




யார் மனதையும் புண்படும்படி வார்த்தைகள் இருந்தால் ! நிர்வாகம் பொறுப்பல்ல !திருத்திக் கொள்ளுங்கள்! இதைப் படித்தபின் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் பிடித்திருந்தால் இதை உங்கள் குழுவிற்கு (what's up & Facebook ) பகிரவும். 


சிட்டுக்குருவி பற்றிய கட்டுரையை வாசிக்க நேரம் ஒதுக்கிய அனைத்து வாசகர்களுக்கும் ! 🙏 என் மனமார்ந்த நன்றிகள் 🌷


Post a Comment

4 Comments

  1. தங்களின் விடீயோவைப் பார்த்தேன்.சிட்டுக்குருவிகளின் சத்தம் வீட்டில் ஒலிப்பது மன அமைதியை உருவாக்கும்.பார்ப்பதற்கும் அழகாக உள்ளது..

    ReplyDelete

  2. அருமையான பதிவுகள். சகோ... வேகமாக நாம் சென்று கொண்டிருக்கின்ற இந்த காலத்தில்... சிட்டுக்குருவிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு உருவாக்குகின்ற கட்டுரை ... .

    ReplyDelete
    Replies
    1. தங்களும் முயற்சி செய்ய வேண்டும் ! வாசித்தற்கு நன்றி

      Delete