**** கொடை மலைகளின் இளவரசி சந்திப்பு - பகுதி - 5

கொடை மலைகளின் இளவரசி சந்திப்பு - பகுதி - 5


கொடைக்கானல்  மலைகளின் இளவரசி


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼         



சூரிய உதயத்திற்கு இப்படி ஓர் அழகா! 
பனி மலையிடையில் கிழித்து வெளிவரும் செங்கதிரவனின் கரங்கள்! 
என்ன ஒரு கம்பீர தோற்றம் !
என் விழிவழியே புகுந்து காலை கதிரவன் எண்ண அலைகளாக பிராணமித்துக் கொண்டிருந்தான் . 
இந்த கொடை மலையில் விடியற்பொழுதை கண்டு !
மரம் ஏறிய அணில் வாலை தரையில் தொட்டு குதிக்கிற மாதிரி மனசு நிதானத்துக்கு வந்தது . இந்த மலையின் இரகசியங்களை தெரிந்து கொள்ள ! விடுதியை விடைப் பெற்று ! மேலும் பயணத்தை தொடர்ந்தோம் .

பூம்பாறை  நோக்கி பயணம் செய்தோம் ! வழிகாட்டி எங்களுக்கு அங்குள்ள சிறப்புகளை கூறிக் கொண்டு வந்தார் ; தீடிரென்று வானம் தன் உடையை மாற்றி மேகக்கூட்டத்தை கருமையாக மாறி கொண்டு , 
உண்டியலை உடைத்த சில்லறை சத்தம் ! சட சடன்னு மழை ; வழி தெரியல ! மலை தெரியல ! பூம்பாறை காடு நனையுது ; மலை பாறை நனையுது ; பாறையில இருக்கிற மரம் , செடி , கொடி நனையுது ; பூமியிலருக்கிற வேர் நனையுது ; 
 நனையாம இருந்தது நாங்க மட்டும் தான் காருக்குள்ளே ! இயற்கை அபிக்ஷேகத்தில் இந்த இளவரசி குளிர நனைந்தால் ; 
ஆயிரம் கண்கள் போதுமா!
மழை பெய்ந்து ஒய்ந்த பின் கொடை மலை 
பூம்பாறை பச்சை தீப்பிடிச்ச எரிக்கிற 
மாதிரியிருக்கு இந்த பூமி ! 





“ கோவில்யில்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் இந்த அழகிய இளவரசி மலையே ஒரு கோவில் மேலும் அழகுவுட்ட சில கோவில்கள் இங்கே  ! ( Poombarai Murugan temple history in tamil) இந்து சமயத்தால் கவரப்படட ஒரு ஐரோப்பிய பெண்ணால் கட்டப்பட்ட இந்த குறிஞ்சியாண்டவர் கோவில் ; இங்கு ஆண்ட ஆங்கிலேயர் காலத்தில் கொடை மலை பகுதியில் நீல நிற வண்ணத்தில் பூத்து குலுங்கும் குறிங்சிமலரின் அழகை காதலித்த ஒரு ஐரோப்பிய பெண்மணி இதே பகுதியை சார்ந்த இராமநாதனையும் காதலித்து மணந்து தன் பெயரையும் மாற்றியுள்ளார்கள் லீலாவதி என்று ! இப்படி இந்த கதையை சொல்லிகொண்டுவந்தார் ;  கதையை கேட்டுக்கொண்டு குறிஞ்சியாண்டவர் கோவிலையடைந்தோம் ,




முருகப்பெருமானை தரிசித்து ; கோவிலை அங்கப்பிரதேஷணம் செய்துகொண்டிருக்கும் போது எங்களுடன் சேர்ந்து பனிமுட்டங்கள் கொஞ்சி விளையாடி வந்தது ; சில நினைவுகளை பதிவு செய்துவிட்டு பயணம் செய்தோம் ,  விட்ட கதையை தொடர…….

பூம்பாறையிலிருந்து பார்த்தல் பழனி மலை முருகனை தரிசிக்கலாம்  ; பனிமுட்டங்கள் கருணை செய்தல் செய்தால் மட்டும் அப்படி ஒருநாள் இந்த ஐரோப்பிய பெண்மணி குறிஞ்சி மலரையும் பழனி கோவில் தரிசித்த போது பனிமுட்டங்கள் முடியதாலும் அதற்கு முருகன் என்ன செய்வார் முருக திருவிளையாட்டு இயற்கையோடு விளையாண்டு இந்த கோவிலை காட்டியுள்ளனர் என சிலர் தற்போது இந்த கோவில் பினபுறத்திலிருந்து பழனி கோவிலையும் வைகை அணையும் இளவரசி பேரழகுடு சேர்த்து கண்டு மகிழலாம்.இளவரசி மலை  பேரழகில் வரலாற்றை பெருமையாக சொல்லி கொண்டு வந்தார் ; மீசை வைத்த சிறுபிள்ளைகளாக இயற்கையோடு சேர்த்து கதையை ரசித்து கொண்டு சென்றோம் ,

பூம்பாறை (Poombarai )செல்லும் வழியில் புதிதாக கட்டிக்கொண்ட்டிருக்கும் மஹாலஷ்மி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ; பூம்பாறைக்கு பயணத்தை தொடர்ந்தோம் திருப்பதி கோவில் படிக்கட்டுகள் மாதிரி அடுக்காக பசுமையான வயல்வெளிகள் 
கண்களுக்கு எட்டிய தூரம் வரை பனிபடர்ந்த மலைகள் அடர்ந்த காடுகள் , மலை ,குன்றுகள் இருக்கும் இடம் என்றாலேமுருகன் இல்லாமல் எப்படி?   

இதன் குன்றுகள் மத்தியில் பூம்பாறை குழந்தை வேலப்பர் (Kulanthai velappar temple kodaikanal), கோவில் நவபாஷணத்தால் செய்யப்படட சிலை இந்த சிலை வடிவில் குழந்தையாக காட்சியளிப்பார் முருகப்பெருமாள் ! மற்ற முருகன் கோவில் போலயில்லாமல் அனைவருக்கும் சமஉரிமை இடையூறு இல்லாமல் தரிசனம் செய்தோம் சிறப்பு தரிசனம் இந்த கோவிலில் இல்லை !  இந்த  மலை (மலை கிராமம்) வாழ் மக்களின்  செயல் மற்றும்  ஒற்றுமையை  கண்டு மெய்சிலிர்த்தது , இளவரசி பேரழகி மலை பகுதி மத்தியில் இயற்கையான அமைதியான சூழ்நிலையில் சுத்தமான பராமரிப்பில் கோவில் ! இங்கே ஒரு அம்மா தேனும் , தினைமாவும் கலந்து கோவிலை நிவேதனம் செய்து கொண்டிருந்தார் தரிசனம் செய்து விட்டு அங்கே சென்றோம் அதற்குள் முடிந்தேவிட்டது தீர்ந்து போன வைத்திருந்த பாத்திரத்தை காண்பித்தார்கள்….,மனதுக்குள் இருண்டுவிட்டது பனிமுட்டங்கள் கோவிலை மறைத்தது எத்தரமாக கோவிலை வலம் வரும் போது திர்ந்து போய்ச்சு சொன்ன அம்மா மீண்டும் விநியோகம் செய்தார்கள் எங்களை கண்டவுடன் ஒரு உருண்டை தந்தார்கள் கோவிலுக்கு வந்த வேலை நிறைவேறியது போல் ஒர் உணர்வு மூடியிருந்த பனிமுட்டங்கள் விலகி கோவில் கோபுர தரிசனம் காட்சியளித்தது .


Post a Comment

0 Comments