**** திருச்செந்தூர் ஓர் கண்ணோட்டம்

திருச்செந்தூர் ஓர் கண்ணோட்டம்


திருச்செந்தூர் வரலாறு


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 

தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்துவோமே - கொரோனா விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு தகவல்கள் மற்றும் முருகன் வழிபடும் முறை :-





திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் - முருகன் மந்திரம் 


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் இந்த மிகப்பழமையான திருச்செந்தூர் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில்.

திருச்செந்தூர் முருகன் பற்றிய 25 சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் :

1. திருச்செந்தூர் முருகன் இரண்டு மூலவர்கள் கொண்டுள்ளது பாலசுப்பிரமணியசுவாமி  கிழக்கு பார்த்தும்  , சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் புரிகின்றனர் 

2. திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இருக்காதவர் யாராக இருந்தாலும் அவருடைய ஜனனம் முதல் மரணம் வரை என்ன தவம் செய்தாலும் பலனை அடைய தகுதியற்றவர்.. இச் சரித்திரத்தை பெற்று வாழ்ந்து இருப்பவர் சூதமாமுனிவர் உரைத் தருளினார்

3. தினசரி பால சுப்பிரமணியன் சுவாமிக்கு வெள்ளை நிற ஆடையும் மற்றும் சண்முகநாதனுக்கு பச்சை நிற ஆடையும் அணியப்படுகிறது 

4. திருச்செந்தூர் கோபுரம் வடிவம் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவில் அமைந்துள்ளது

5. திருச்செந்தூர் கோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது அந்தக் கோபுரம் 157 அடி உயரமும் மற்றும் ஒன்பது அடுக்குகளைக் கொண்டது


6. அருணகிரி நாதர் திருச்செந்தூர் முருகனைப் போற்றி   தலைப்பில் 
83 திருப்புகழ் பாடியுள்ளார் .. பக்தியுடன் இப்பாடலை பாடினால் பாவங்கள் நீங்கும் என்று கூடுதலான தகவல்

7. திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டுள்ளது மற்றும் 124 தூண்களைக் இதை தாங்குகிறது 

8.  கோயிலுக்கு செல்லும் வழியில் விநாயகர் கோயில் உள்ளது மற்றும்  விநாயகரை வணங்கிய பின்தான் முருகனை வணங்க செல்ல வேண்டும் -முருகனை வழிபடும் முறை.

9. இக்கோயிலில் 11 சித்தர்களில் 8 சித்தர்கள் சமாதி ஆகி உள்ளதாக கருதப்படுகிறது

10. திருச்செந்தூர் நாழிக்கிணறு அதன் 24 அடி கொண்டது மற்றும் நாழிக் கிணற்றில் நீராடிய பிறகே கடலில் குளிக்க வேண்டும் என்பது  கூடுதல் தகவல்

11. சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பிறகு முருகன் தெய்வானை திருமண நாளில் மட்டுமே ராஜ கோபுர வாசல் திறக்கப்படும் மற்ற நாட்கள் முழுவதும் அடைக்கப்பட்டு இருக்கும்

12. திருச்செந்தூர் மூலவர் சன்னிதானத்துக்கு பின்புறம் பஞ்ச லிங்கத்தை காணலாம் இந்த அறைக்கு  பாம்பறை என்று மற்றொரு பெயர் உண்டு , இந்த பஞ்ச லிங்கத்தை காண்பதற்கு  தற்போதைய அறநிலைத்துறை ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

13. திருச்செந்தூரில் மூலவர் முகப்பு ஸ்தானத்தில் உள்ளது தளம் மணியடி என்று பெயர் உண்டு ,  இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிக்கலாம்

14.  சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமான் சேர்ந்து போரிட்ட படை வீரர்கள் அனைவரும் அய்யனார் என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றன

15. ஆறுமுக நாயனார் என்ற மற்றொரு பெயர் செந்தில் ஆண்டவருக்கு உண்டு திருச்செந்தூர் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்கள் பலரும் நாயனார் என்றும் மற்றும் சுவாரஸ்யம் என்னவென்றால் இஸ்லாமியரும் நாயனார் என்று தங்கள் பெயரை  சூட்டிக் கொள்கின்றனர்

16. ஐ.எஸ்.ஓ என்ற தரச்சான்றிதழ் இக்கோயிலுக்கு  பெற்றுள்ளது

17.  தங்கத்தேரில் அறுங்கோண வடிவில் கொண்ட முருக சிலைகள் இந்த கோவிலில் உள்ளன

18.  கிபி 1882ல் கோவிலில் திருப்பணி செய்த துறவிகளில் ஒருவர் திரு காசி சுவாமி வசந்த மண்டபம் கட்டியுள்ளார் 

19.1895 இல் மௌன சுவாமி என்ற துறவி மண்டபத்தைக் கட்டி முடித்தார் , கிரி பிரகாரத்திற்கு தகரக் கொட்டகை அமைத்தது வள்ளிநாயக சுவாமி

20. போற்றிமார் - மூலவர்  திரிசுதந்திரர் - சண்முகநாதனுக்கு மற்றும் வைணவர்கள் -  திருமால் திருமாலுக்கு நெய்வேத்தியம் மூன்று தலங்களில்  தனித்தனியாய் தயாரிக்கின்றனர் .


21. திருச்செந்தூரில் முருகப்பெருமான் கோவிலில் ஆவணி திருவிழாவின்போது சிவன் - விஷ்ணு - பிரம்மா மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அம்சமாக காட்சி தருகின்றனர் மேலும் சைவ , வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளது.

22. வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூரில் உச்சிகல பூஜை முடிந்து மணி ஒலிக்கப்பட்ட  பிறகு
 சாப்பிடுவார் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று 250 ஆண்டு பழமை வாய்ந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரம்மாண்ட மணி ராஜ கோபுரங்களில் 09 அறைகளிலும் பொருத்தப்பட்டுள்ளது

23. தற்போது நடைமுறையில்  தரிசனங்கள்
ரூபாய் 100,250,500 விரைவு தரிசனம் , ரூபாய் 10 , 20  சிறப்பு தரிசனம் , மற்றும் இன்றைய சொல் பொது தரிசனம் இதற்கு பழங்கால சொல் தர்ம தரிசனம் என மூன்று தரிசனங்கள் உள்ளது

24. சண்முகம் நாதருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு நடைபெற்று வருகிறது
 ஐப்பசி , சித்திரை  ,தை  -3 
தை , ஆடி  அமாவாசை -  2
மாசி , ஆவணி - 10
பங்குனி திருக்கல்யாணம் ,  ஐப்பசி -  2
மாத விசாகம் -  12
தை வருடாபிஷேகம் , ஆனி -  3
மகா சிவராத்திரி , தீபாவளி - 4 

25. வீரபாண்டிய கட்டபொம்மன் மனைவி  ஜக்கம்மா திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமாக தங்க நகையை காணிக்கையாக வழங்கி உள்ளனர்

நன்றி






Post a Comment

2 Comments

  1. கோவிலைப்பற்றிய அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்..

    ReplyDelete