ராமேஸ்வரம் பயணக்கட்டுரை
ராமன் தேடிய சீதை
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
வெளிச்சத்த பார்த்து பயந்து பயந்து ஓடுது இருட்டு ...சூரியகதிர்கள் வெளியே வர வர ...!
கோவியிலுள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு கோவில் சந்திதானத்துக்கு சென்றோம் ....அங்கு ..!
ஆட்டுக்கு பின்னால் ஆட்டுக்குட்டியாங்க
போற மாதிரி கோவில் வழிகாட்டி பின்னால போவுது அயல்நாட்டுகாரர்கள் ...!
கூடவே போகுது மனசு ...!
ராவணனை போரில்
வென்ற ஶ்ரீராமபிரான் அனைவரும் புஷ்பக விமானத்தில் சென்றனார் அயோத்திக்கு ...!
ஶ்ரீராமபிரான் வழிகாட்டி மாதிரி சீதைக்கு
வானர்கள் கட்டிய பந்தனத்தை ( ராமர் பாலம் வரலாறு ) விளக்கிக் கொண்டு வந்தார் ..!
அவசர காலத்துல தரையிறங்கிற விமானம் மாதிரி இந்த
சேது சமுத்திரத்தில இறங்குது புஷ்பகம் ...!
எல்லோரும் திகைத்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர் ...அதற்கு ஶ்ரீராமபிரான் ...
இராவணன் பிறப்பால் பிரமாண குல என்பாதல் கொன்ன பாவத்தை தீரவும் .., பிரம்மஹத்தி தோஷம் நீங்க ... சிவ பூஜை செய்ய சிவலிங்கத்தை கயிலாயத்திலிருந்து ... கொண்டு வர அனுமனிடம் அணை பிறப்பித்தார் மட்டுமின்றி காலமும் , நேரமும் குறிப்பிட்டார் ..,
சிவபூஜைக்கு நேரம் ஆகியும் அனுமன்
வராததைக் கண்ட சீதாதேவி ...! சிவலிங்கத்தை மண்ணால் செய்து அக்னி தீர்த்ததில் நீராடி பின்னர் ..!
22 தீர்த்தங்களைக் கொண்டு ஶ்ரீராமபிரான்-சீதாதேவி யும்
பரிகார பூஜையை நிறைவு செய்தனார் ...!
தாமதமாக வந்த அனுமன் ... பூஜை முடிந்த கோலத்தை பார்த்துவிட்டு ஶ்ரீராமபிரான் கண்டார் ..!
ஶ்ரீராமபிரான் பொன்முறுவலுடன் நடந்ததை கூறினர்...!மற்றும் அனுமன் மனமுடைய கூடாது என்பதற்காக கொண்டு வந்த காசிவிஸ்வாநாதரை வலப்பக்கம் வைத்து பிரதிஷ்டை செய்தனார் ... இதனால் தான் இராம+லிங்கம் என்ற பெயரை இராமேஸ்வரம் என்று அழைக்கின்றோம் ..
இங்கு இருக்கும் ஒவ்வொரு லிங்கத்துக்கு ஒரு காதை உள்ளது.....
திருவிழால காணாம போனது வந்தது போல திரும்பி வந்துச்சி மனசு ..!!!
இப்பேர்பட்ட தீர்த்ததில் நீராடியதை நினைத்து நெகிழ்ச்சியடைந்தோம் ..,
ஆனால் தீர்த்தம் தெளிப்பது வியாபரமாக உள்ளது ..!
இங்கு வரும் பக்தர்கள் தான் இவர்களுக்கு கடவுள் ..!
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ..! விவசாயம் செய்ய முடியாத வறண்ட புண்ணிய பூமி ...
எந்தெந்த தண்ணிக்கோ
உதவி செய்கிற அரசாங்கம் ;
இவர்கள் தண்ணிக்கு ( கண்ணீர்க்கு) உதவி செய்தால் நிலைமை மாறும் ...!
இவ்வாறு நினைத்து கொண்டு கடவுளை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்றோம்....!
இங்கு வந்திருக்கும் அனைவரும் ஒவ்வொன்று ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் ...
கிழ்மட்டத்துக்கு - பணம் ;
நடுத்தரமட்டத்துக்கு - வேலை ;
உயர் மட்டத்துக்கு - ரெண்டையும் காப்பற்ற ஒரு வாரிசு ;
பாலன் /பேதை க்கு- கடவுள் மொழி ;
மறவோன் க்கு - படிப்பு ; திறவோன்/ பெதும்பை க்கு-அறிவு ; விடலை க்கு- மீசை ; காளை க்கு- மங்கைகள் ; - மங்கை க்கு- திருமணம்/மறுமணம் ; மடந்தை க்கு- தெய்வத்துக்கு நிகரான நகை ; அரிவை / தெரிவை க்கு - பாதுகாப்பு ; முதுமகன் / பேரிளம்பெண் க்கு- நான் தான் கடவுள் ..!!!
இத்தனை வேண்டுதல்களையும் செவியுள்ள இவ்வினம் செவி சாய்க்க தவறியதால் ; செவிய சிலை கேட்குதே என்ற நம்பிக்கையில் ...! இந்த
ரெட்ட கால் மனசு !!! அதில் ஒரு சுகமும் பாதுகாப்பு இருப்பதாக தெரிகிறது ...!
பிறக்கும் போது தெரிந்த கடவுள் மொழி ..! ஒரு செடி வளர வளர மரம் ஆகிற மாதிரி ...!
ஆணவ மொழி ; அகங்கார மொழி ; ஜாதி மொழி ; இன மொழி - வளர்ந்து ஞான மொழிங்கிற (கடவுள் மொழி ) மறைகிறது ;
இதையறிந்த சில பேர் ஞானியாகிறார்கள் ;
இன்னும் பல பேர் என்னை போல தேடிக் கொண்டிருக்கிறார்கள் ...!
குறிப்பு
ராமர் பாலம் - தற்போதைய பெயர் ஆதாம் பாலம்
ராமர் பாலம் - தற்போதைய பெயர் ஆதாம் பாலம்
பிரம்மஹத்தி தோஷம் நீங்க மந்திரம் :-
ஸஷுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்

2 Comments
Nice anna..
ReplyDeleteTq u
Delete