ராமேஸ்வரம் பயணக்கட்டுரை
ராமன் தேடிய சீதை
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
நானும் என் நண்பனும் தங்கியிருந்த அறையில் இருந்து உடைமைகளை வைத்து விட்டு வீதியில் உலா சென்றோம் ....
இரவு நேரத்தில் நிலவுப் பெண் வானத்தில் கம்பீரமாக பவனி வந்து கொண்டிருந்தாள் ...
தெருவோர தேனீர் கடையில் அமைச்சரவை கூடி இருந்தது ...
அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் செய்தி கூட தசரதன் தீர்ப்பு போலிருந்தது வனவாசம் செல்ல வேண்டுமென்று..!திருமணம் முடிந்து ஒரு நாழிகைப் பொழுது கூட ஆகவில்லை ! அதற்குள் இப்படி ஒரு செய்தி! திருமணம் முடிந்த மண்டபம் போல் காட்சி அளித்தது தெருவோர குப்பைகள்..

இந்த ரம்மியமான இரவு பொழுதில் கடற்கரையில் உலா வந்தோம்..!
காற்றை சுவாசித்து களைப்பாற்றி பேசிக்கொண்டிருந்தோம்...
அப்போது நான் கண்ட காட்சி பேரலைகள் சிற்றலைகளை ( சுமித்திரை) துரத்திப் பிடிப்பது போலவும் மற்றும் கரையை யார் முதலில் தொடுவது ??? என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தது ... கரையைத் தொடுகின்ற நொடிப்பொழுதில் பேரலை சிற்றலையையும் என் மனக் கூண்டையும் கடலுக்குள் உள்வாங்கியது .....
'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'"
மனிதப் பிறவியான ஸ்ரீராமபிரான் தந்தையின் ( தசரதன்) வாக்கை காப்பாற்றுவதற்காக..! தன் உயர் பதவியை துரத்து வனவாசம் செல்ல தயாரானார் ! என் கணவன் இருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி என்று தேவி சீதையும் உடன் செல்ல தயாரானாள் ! லட்சுமணன் தன் தாயிடம் அனுமதி கேட்க சென்றான்.., பாரதத்தாய் .., புரட்சித் தாய் பதிலை கேட்க ஆவலுடன் இருந்தான் ....
அந்த பாரதத்தாய் தாயின் பதிலை கம்பர் பாடலில் ....
ஆகாதது அன்றால் உனக்கு ; அவ் வனம் இவ் அயோத்தி ; மா காதல் ராமன் நம் மன்னவன் ; வையம் ஈந்தும் போகா உயிர் தாயார் நம் பூங்குழல் சீதை - என்று ஏகாய் ; இனி இவ் வயின் நின்றாலும் ஏதம் - என்றால் (146)
எப்பேர்ப்பட்ட வீரத்தாயின் பதில் அது...
லட்சுமணன் மகிழ்ச்சியோடு ., கம்பீரமாக தன் அண்ணனுடன் வனவாசம் புறப்பட்டான்..

இழுத்துச் சென்ற பேரலை என் மனதையும் சிற்றலையும் கரையில் தூக்கி போட்டது.., பேரலை .!
போட்டியில் வென்றதாக நினைத்த சுமித்திரை என்ற சிற்றலை அப்போது அவளுக்கு புரியவில்லை !
ஶ்ரீராமர் வனவாசம் போன கதை நினைத்துக் கொண்ட அடுத்த கணமே நித்திராதேவி ஆட்கொண்டாள்.
விடியல் பொழுது மெல்லிய பனிச்சாரலை போர்வையாய் போர்த்தியிருக்க வானம் செங்கதிரை வெளியிட்டு எழுந்த சூரியனே அணைத்தபடி விடிந்து கொண்டிருந்தது...
அக்னி தீர்த்தம் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி மடத்துக்கு முன்புள்ள கடல்தான் ..!அங்கு சென்றோம்.., சில பேர் பித்ரு தர்ப்பணம் ; இன்னும் சில பேர் பரிகாரங்கள்
செய்தபின் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்.,
ஐப்பசி மாதம் என்பதால் சுவாமி சரணம் ஐயப்பன் பக்தர்களுடன் சேர்ந்து நாங்களும் நீராடினோம்...
தேன் கூட்டில் கூட்டமாக தேனீக்கள் இருக்கும் இடத்தில் தான் தேனை களவு செய்வது இந்த மனிதன் தான் !
அதே மாதிரி இங்கு வரும் பக்தர்களிடம் சிலர் தேனை களவு செய்ய ஒரு கூட்டம் உள்ளது! ....கடலில் நீராடிவிட்டு கோயில் அருகில் உள்ள பாதுகாப்பு அறை எடுத்தோம் ..! தேனை காப்பாற்றுவதற்காக..! (மனிதன் தேன் என்பது கைபேசி , பணம் )
கோவிலிலுள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட சென்றோம் ...அவை
1) மகாலட்சுமி தீர்த்தம் 2) சாவித்திரி தீர்த்தம் 3) காயத்ரி தீர்த்தம் 4) சரஸ்வதி தீர்த்தம் 5) சேது மாதவ தீர்த்தம் 6) நள தீர்த்தம் 7) நீல தீர்த்தம் 8) கவாய தீர்த்தம் 9) கவாட்ச தீர்த்தம் 10) கந்தமாதன தீர்த்தம் 11) சங்கு தீர்த்தம் 12) சக்கர தீர்த்தம் 13) பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் 14) சூரிய தீர்த்தம் 15) சந்திர தீர்த்தம் 16) கங்கா தீர்த்தம் 17) யமுனா தீர்த்தம் 18) காயத்ரி தீர்த்தம் 19) சாத்யாம்ருத தீர்த்தம் 20) சிவ தர்த்தம் 21) சர்வ தீர்த்தம் 22) கோடி தீர்த்தம்
கோவிலுக்கு வெளியே மூன்று தீர்த்தங்கள் :-
1) லட்சுமண தீர்த்தம் 2) ராம தீர்த்தம் 3) அக்னி தீர்த்தம்
இந்த தீர்த்தங்களுக்கு சில காதை உண்டு அதை அடுத்த பகுதியில் சந்திப்போம் ...
பயணம் தொடரும்....
நன்றி
குறிப்பு
தர்ப்பணம் என்பது :- திருப்தி செய்வது ( எல்லோரும் செய்யக் கூடிய புண்ணிய காரியம்அக்னி தீர்த்தம் -
நீராடி விட்டு தான் கோயிலுக்கு சென்று மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்...
காதை - என்றால் காவியம்
விளக்கம் :-
மகனே ! உனக்கு ஸ்ரீராமன் செல்லும் வனமே அயோத்தி ..! அரசனும் , தந்தை இனி ஸ்ரீராமன் ஒருவனை உனக்கு .! உன் தாய் இனி சீதை..! நீ இந்த நொடி நேரம் தாமதிப்பது குற்றமே - என்றாள்
மகனே ! உனக்கு ஸ்ரீராமன் செல்லும் வனமே அயோத்தி ..! அரசனும் , தந்தை இனி ஸ்ரீராமன் ஒருவனை உனக்கு .! உன் தாய் இனி சீதை..! நீ இந்த நொடி நேரம் தாமதிப்பது குற்றமே - என்றாள்
2 Comments
Super anna
ReplyDeleteTq u tambiii
Delete