**** மனதில் ஓர் சூரிய உதயம்

மனதில் ஓர் சூரிய உதயம்

விடியலை நோக்கிய பயணம் 


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


வானத்திலிருந்து சங்கீதமில்லாமல் அவிழ்ந்து வந்து மொத்தமாக மூடுகிறது -இரவு 


முழு நிலவு உச்சி வானத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது - 11:30.


என் அறையிலிருந்து துணிமணிகளை பையில் எடுத்து வைத்து ..,கீச்.. கீச்.. கதவை மெல்ல திறந்து சாய்த்துவிட்டு .! ஹாலில் உறங்கி கொண்டிருக்கும் என் தெய்வங்களை தாண்டி .., மீண்டும் கீச்.. கீச்.. என்ற கதவு சங்கீத சத்தத்திற்கு துணை இசை கோர்வையாக டப்.. டப்.. இதய ஒலி மனசு - என்ற காதுக்கு இசையாக ஒலித்தது..

இசையை ரசித்து கொண்டு வாசல் கதவை திறந்து இரு சக்கர வாகனத்தை வெளியே எடுத்து..,கதவை சாய்த்துவிட்டு ! இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு தெரு முனையைடைந்து பெரு மூச்சு விட்டேன்…!       

                                             அபாய காத்து என்ற நினைத்த தூங்காத காகம் ஒன்று மரத்திலிருந்து தூக்கணாங் குருவி கூட்டிலிருந்து எட்டி பார்ப்பது போல் பார்த்தது..!

இருளின் ஆழத்தில் எறியப்பட்ட கல்லால் சத்தம் ஒடுங்கி கிடந்தது தெரு..! தெருமுனையிலிருந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க ஆரம்பித்தேன்..

எதிரே வருகிற வாகன ஒளி  மாதிரி எதிர்வினை புரிந்து கொண்டு வந்தது – காத்து !

அதிக வாகன வரத்து இல்லாத இடங்களில் உடல் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்த போது ..,கீ.. கீ..என்ற ஒலி மின்சாரமில்லாத வீட்டில் மின்சாரம் வந்து பாயும் போது அந்த மின்விளக்கு உணர்ச்சிதான் ..!                                                            இந்த உடலும் மனமும் இணையும் போது..

ஆறுமுகநேரி தாண்டி ; வீரபாண்டியன்பட்டினம் கடந்து ; திருச்செந்தூரை அடைந்தேன். 

தேத்தண்ணி வாங்கி கொண்டு கடலுக்கு சென்றேன். தேத்தண்ணி மூக்கில் அருகில் கொண்டு சென்று ..,அந்த வாசனையை உள்ளிழுத்து நுரையீரல் நிரப்பி -வயிறு உப்பி.. பிறகு தலை நெற்றியில் வைத்து உருட்டி ..! சூடு பதம் பார்த்து மூளையை  சூடு செய்து ..,உதட்டருகில் கொண்டு சென்று கண் கவிந்து சர்ர்.. சர்ர்.. ஓசையில் சங்கீதம் கேட்டு… நாவின்  சுவை மூளைக்கு அறிவிப்பதற்குள் - குடலுக்கு சென்றது தேத்தண்ணி..!

சர்ர்.. சர்ர்… என்ற ஓசையுடன் வானத்தில் நிலவுக்கு தாலாட்டு படும் விதமாக இந்த கடல் அலை ஓசை..!

இக்கடல் பகலில் சேமித்த வெப்பத்தை கக்குகிறது   -                                                                   என் கால்களில்...!                                                        குளிர்ந்த காற்று - உடம்பில் பட்டு நடுங்க செய்கிறது…!                          கடலின் சங்கீத ஒலியால் காதுக்குள் நுழைந்து மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் இழுக்கிறது..; பொல்லாத  இக்கடல். அதுவரை கண்டறியாத உணர்ச்சி வெள்ளம் என்னை ஆட்கொண்டது.., மனத்தில் உள்ளக்கடலில் மலை போல் அலைகள் எழுந்து விழுந்தது ; புயலும் தென்றலும் மாறிமாறி கலந்து அடித்தன ; சோர்வு -நீங்கி குதூகலம் -இன்பமும் என் மீது மோதின.

பிராண வாயுவை மூலம் அலை பாய்கிற இம்மனசை கட்டுக்குள் இழுத்து அந்த இடத்தை விட்டு கிளம்பினேன்.., மேலும் பயணத்தை தொடர்ந்தேன் ..இரவு 01:30.

அலையோடு அல்லாடி கொண்டிருக்கும் மனது ! என்ற  படகுக்கு நல்லதொரு நங்கூரம் நீ ! - பிராண வாயு

காத்து முன்னை காட்டிலும் கொஞ்சம் வேகமடைந்து விர்… என்று வீச ஆரம்பித்தது.

கடற்கரை சாலை குளிர்ந்த உப்பு காத்து உல்லாச பயணம் நிலையான உடல் கத்தோடோட சேர்ந்து கூத்தடிக்கிறது…, நிதானமில்லாத மனம்!

இருசக்கர வாகனத்தில் ஓடிய எண்ணிக்கையை விட மனதில் ஓடிய சிந்தனைகள் பயணம் தான் அதிகம் !                                                                                            சிக்னலில் நின்றது மனம் ! சிக்னல் விளக்கு என்ற ஒழுங்கு வந்த பிறகும் காவல்துறை அதிகாரி தேவைப்படுவது நம் தேசத்தில் மட்டும் தானா ? இல்லை அயல் தேசத்திலும் விசாரிக்க வேண்டுமா ? என்று பட்டிமன்றத்தை துவக்கியது ;- மனம் !                                                                                                                                                                              பச்சை ஒளி வந்தவுடனே; சிவப்பு ஒளியில் தோன்றியது எண்ணம் ஓடி மறைந்தது - விரைந்தது மன பயணம்..

மீண்டும் நின்றது.! மணப்பாடு பாலத்தில் ஆடி-பாடி-ஓடி-பாய்ந்து முதிர்ச்சியடைந்த நிலையில் நிதானமடைந்து ஜோதி என்ற கடலில் கலக்கிறது கருமேனி ஆறு ! இயற்கையின் பாடம்.                                                                                                                                                                பாலத்திலிருந்து பார்த்தல் கடலில் கலக்கும் இந்த ஆற்றை பார்க்கலாம்…

முழு நிலவு உச்சி வானத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தது -இரவு 02:30.

சந்தோசத்திற்கு எத்ததனையோ பெயர் உண்டு .ஒரு பெயர் மழை .

புனுபுனுபுனு தூற்றல் வேற தூற ஆரம்பித்தது.. மழை !சூரிய உதயம் காணாமல் போய்விடுமோ ! நினைத்த கணநேரத்தில் மெல்ல மெல்ல கடல் போல் உள்வாங்கியது மழை..!

மழையிலிருந்து விடைபெற்று பயணம் தொடர்ந்தது ..!

உவரி ; நாவலடி ; செட்டிகுளம் ; அஞ்சுகிராமம் - பால்குளம் இவ்வூர்களை கடந்து கடைசியாக தஞ்சமடைத்தது காந்திமண்டபத்தில் .

இருசக்கரவாகனத்தை நிறுத்தி நடைப்பயணத்தை மேற்கொண்டேன்..

இன்னு விடியல செங்கமலாயிருக்கு ..! தற்போது முழு நிலவு உச்சி வானத்தை தாண்டி மேற்கு திசையில் சற்று இறங்கி நின்றது..

 பூக்கடை - பழக்கடை - பொம்மை கடை - சைக்கிள் வண்டி தேநீர்கடை ; எல்லாம் முதலீட்டுக்கெதிரான நடைபாதை யுத்தத்தை நடத்தி கொண்டிருந்தார்கள்.

 இந்தியாவில் தூய்மை திடடத்திற்கு தன் பங்க்கை நடைபாதையில் காறி உமிழ்ந்து துப்பி நடந்து போய் கொண்டிருந்தது ஒரு இருமல் பெருசு.

இதையெல்லாம்  கடந்து - நடந்து கடற்கரை பாறைமீது அமர்ந்து.. அன்னாந்து பார்த்தால் பிரசவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது - வானம்..

கடலின் ஆரவாரம் கொஞ்சம் அதிகமாயிருந்தது ! கடல் அலையின் குமுறல் தூரத்தில் எங்கேயோ சிங்கம் கர்ஜனை செய்வது மாதிரி ஓசையை எழுப்பியது ! ஒரு பெரிய அலை பாறையின் மீது மோதி முகத்தில் பன்னிர் போல் தெளித்தது ..! இறந்த காலத்திற்கு செல்ல விடாமல் நிகழ்காலத்திலேயிருந்தது மனம்.

 குமரி தாயின் தொப்புள் கொடியிலிருந்து உலகத்துக்கு தோன்றினான் கதிரவன் கன்னியாகுமரியில் .



அஸ்தமனம்.






 


Post a Comment

1 Comments