**** கதை திருவிழா - 2020

கதை திருவிழா - 2020


வணக்கம் அன்பான படைப்பாளர்களே ...! 

சர்வமும் சிவமயம் நடத்தும் -  கதை திருவிழா - 2020

 மக்களின் கதை கேட்கும் ஆர்வம் காலங்காலமாக  வேருன்றியுள்ளது .. 

தொடக்கம் முதல் இன்று வரை காவியங்கள். இதிகாசங்கள், நாவல்கள் ,சிறுகதைகள், நாடகங்கள் என பல்வேறு வடிவங்களை கொண்டுள்ளது.

இன்றைய நிலையில் உலகில் சிறுகதைகள் என்று தனித்த இடம் உள்ளது. கல்வி அறிவியல் வளர்ச்சியும், செய்தித்தாள்களின் வளர்ச்சியும் ,மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை வளர்ந்துள்ளன ரயிலிலோ பேருந்திலோ பயணம் செய்யும் போது அல்லது வேலைகளுக்கு நடுவே 
அவ்வப்போது கிடைக்கும் இடைவேளையில் படித்து முடித்து விட கூடிய நிலையில் சிறுகதையில் அமைந்துள்ளன.



தலைப்பு :- 

  1. இயற்கை
  2. பயணம் 

இயற்கை மற்றும் பயண அனுபவங்களை கதையாகவோ/ கட்டுரையாகவோ போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். படைப்பு சிறுகதைகள் வடிவில் இருந்தால் போதுமானது. (400 மற்றும் அதற்கு மேல் வார்த்தை அளவுகள்)

படைப்புகளை சேர்க்கவேண்டிய கடைசி நாள் - நவம்பர் 15, 2020. போட்டி முடிவுகள் ., தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பரிசுத்தொகை :

தலைசிறந்த 05 படைப்பாளிகளுக்கு Rs.1000/- மதிப்பிலான பரிசு வழங்கப்படும். போட்டி முடிவுகள் நடுவர்களின் தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

முக்கியமானவை :

1) ஒருவர் அதிகபட்சம் 1 படைப்புகள் சமர்ப்பிக்க இயலும்.

2) நீங்கள் சமர்ப்பிக்கும் படைப்பு உங்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். (வேறு ஒருவருடைய படைப்பை எடுத்து சமர்ப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது)

3) புதிய படைப்புகளை மட்டுமே சேர்க்க இயலும். (பிற தளங்கள், பத்திரிக்கைகளில் வெளியான படைப்புகளை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது)

4) படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதவும்.

5) படைப்பிற்கு பக்க அளவுகள் எதுவும் இல்லை. எந்த அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) படைப்புகளை சமர்ப்பிக்கும் முன்னால் இந்த இணையதளத்தில் உங்கள் மின்னஞ்சலை மூலம் subscribe செய்யவும் 

7) படைப்புகளை word file மூலம் எங்களுக்கு அனுப்பவும் 




போட்டிக்கு வந்த படைப்புகள் அனைத்தும் Google news apps மற்றும் tamildamo.com என் இணையதளத்தில் வாசகர் பார்வைக்கு வைக்கப்படும் , இணையதளத்தில் (blogger viewers , comments & subscribe ) பெறும் வாக்குகள் 50% சதவீதமும்,படைப்பின் தரத்தை ஆய்வு செய்து 50% சதவீதம் கணக்கிட்டே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்

தங்கள் கதையை, அனைவருக்கு பகிர்ந்து இயன்ற அளவு உங்கள் வாக்குகளை பெருக்கி, *100 நபர்களில் ஐவராக பரிசுகளை வெல்ல எங்கள் வாழ்த்துகள்*


படைப்புத்தேர்வில் நடுவர் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – +91 97903 14902.

வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி.



 பங்கேற்க :-  


Post a Comment

2 Comments

  1. கதை திருவிழா- அற்புதமான முயற்சி

    ReplyDelete
  2. நன்றி உனக்கு தெரிந்தவர்களை கலந்துக்க செல்லு

    ReplyDelete