**** இளவரசியின் சந்திப்பு - பகுதி - 2

இளவரசியின் சந்திப்பு - பகுதி - 2


கொடைக்கானல் மலைகளின் இளவரசி


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 

                                             இந்த பதிவில் வரும் வார்த்தைகள் யாரையாவது பாதித்திருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல ! திருத்திக் கொள்ளுங்கள் எனக்கும் சேர்த்துதான் , வாருங்கள் பயணிப்போம் 💐



                                                                     பள்ளிக்கூடம் கடைசி நாள் வாழ்க்கையை
போல் இந்த பூஞ்சோலையை விட்டு பிரிந்த ஓர் உணர்வு , உலகமே கையிலிருக்கும் கைபேசி ( mobile phone ) இருந்தும்  நாங்கள் அடுத்து எங்கு செல்ல வேண்டும்  என்று அந்த இளவரசி மலையில் வாழ்ந்து வரும் வழிகாட்டியிடம் ஆலோசித்து சென்றோம் , சிறிது நேரம் மெளனத்திற்க்கு பிறகு தன் அனுபவத்தை கூறிக்கொண்டு வந்தார் , தூங்க செல்லும் குழந்தை தன் தாயிடம் கதையை கேட்பது போல் கேட்டுக் கொண்டு வந்தோம் , சிறிது காதத்தூர பயணத்துக்கு பின் அந்த இடத்தை அடைந்தோம் , அது தான் ஊசியிலை காடு (pine forest). 





அதை பார்த்த பின்பு தான் நேதாஜி , காந்திஜி நினைத்து பார்த்து சினத்தைத் தூண்டியது எண்ட இந்த சுதந்திரத்தை பெற்றோம் என்று , அப்போது நம் தாய் நாட்டை அண்ட ஆங்கிலேயர்கள் காடுவளத்தை மேம்படுத்திருக்கிறார்கள் அதற்கு இந்த  ஊசியிலை காடே சாட்சி அதே ஆங்கிலேயர்கள் தான் இப்போது ஆமேசான் காடுகளை (amazon forest ) தீ வைத்து அழித்துருக்கிறார்கள் பணம் பத்தும் செய்யும் என்று நினைத்துக் கொண்டேன் ,

 எங்கள் ஊர்களில் வாகன நெரிசல் , காப்பர் தொழிற்சாலை மற்றும் இதர தொழில்சாலைலிருந்து வரும் மாசு கலந்த காற்றை சுவாசித்து அலுத்து போயிருந்த எனக்கு கருவுற்ற தாய் தன் கருவறயிலிருக்கும் பிள்ளைக்கு கலப்பிடல்லாமல் மாசுற்ற காற்றை கொடுப்பதுப் போல காட்டில் நுழைந்தவுடன் இந்த பேரழகி இளவரசி  எங்களுக்கு கொடுத்தல் பிறந்த பலனடைந்த ஓர் உணர்வு மீண்டும் என்னுள் தோன்றியது , மனித உடலில் இரத்ததைக் கொண்டு செல்லும் நரம்புகளை போன்ற இங்கே மரங்களின் வேர்கள் ஒன்றோடு ஒன்றாக பின்னினைந்து பாய்ந்து கொண்டிருந்தன , தாய்மார்கள் தன் குழந்தைகளை தொட்டில் போட்டு ஆடும் குழந்தையை போல இங்கே பாயும் வேர்களில் சிறுவர்கள் ஆனந்தமாக ஆடினார்கள் கண்டுகளித்து சிறிது நேரம் மீசை வைத்த சிறுவர்களானோம்.

மகாபரதத்தில் சொந்தகாரர்களை எதிர்த்து போர் செய்வதை விட காடுகளுக்கே திரும்பி செல்வது மேலென்று தருமன் கண்ணணிடம்  ஏன் ? எதற்கு கூறினான் என்று இந்த சோலைவனத்தை பார்த்தப் பின்பு தான் புரிந்தது , காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனை போல ஆங்கங்கே கள்ளக் காதலர்கள் தென்ப்பட்டனர், அனாதை இல்லம் நிறைய  இருந்தும் ஆங்கங்கே குழந்தைகள் காணபடுவது போல் இந்த சோலைவனத்தில்  குப்பைத்தொட்டியிருந்தும்  குப்பைகளை கண்டு மனம் பொங்கியது , நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று இந்த மிருக வகை மனிதர்களை எண்ணி மனம் வருந்தியது , 



நாங்கள் வருந்த்திய மனதோடு அடுத்த இடத்தை அடைந்தோம் , பெண்களுக்கு இயல்பாகவே ரகசியத்தை மறைத்து வைக்கும் குணமுண்டு என்று இந்த இடத்தை மலை இளவரசியிடம் கண்ட பின்பு தான் என் மனம் ஏற்றுக் கொண்டது , அப்படிப்பட்டது தான்  இந்த குணா குகை ,
"ஆழம் தெரியாமல் காலை விடாதே " இந்த பழமொழிக்கு ஏற்ப சில
இளையஞர்கள் ஆர்வக் கோளரில் உள்ளே இறங்கி பார்க்கிறோம் என்று குகைக்குள் சென்று மாட்டி அதல பாதளத்திற்க்கு சென்றுருக்கிறார்கள்
மனிதர்கள் தவறு செய்வது சாதரணம் தான் , ஆனால் பிறரை பாதிக்காத படியிருந்தால் எதுவும் பெரியதாக தெரியது,  அப்படிப்பட்ட மனிதர்கள் தவறு செய்ததால் இங்கே இப்போது யாரையும் அனுமதிப்பதில்லை , நாங்கள் பொது தரிசனத்தில் தூரத்தில் கடவுளை காண்பதை போல் கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.
அடுத்த இடத்தை நோக்கி பயணம் செய்யும் போது இந்த குகையின் வரலாற்றை கேட்டு தெரிந்துக் கொண்டோம்  இந்த குகையை பார்க்கும் போது அனைவருக்கும் இது மனதில் காட்சியளிக்கும்
“” மனிதர்கள் புரிந்துக் கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது “”  அதன் பின்பு தான் இதற்கு குணா குகை பெயர் பெற்றது , அதற்கு முன் இந்த குகையின் உண்மையான பெயர் பிசாசின்சமையலறை (devil kitchen) 


ஏப்படி செல்வது :-




Pine forest:
   கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 4.5 கி.மீ தொலைவில் உள்ளது, 1906 ஆம் ஆண்டு இந்த காட்டை  பிரயண்ட் என்பவர்   உருவாக்கி உள்ளார்.  கொடைக்கானல் மலைப்பகுதியை பசுமையாக்கும் முயற்சியில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இந்த காடு தற்போது சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.




           குணா குகை:

இந்த மரப்பாலம் மூலம் குகையின் முகப்பு பகுதியை காணலாம் , இந்த இடம் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ,

(பயணம் தொடரும்)

Post a Comment

2 Comments