கொடைக்கானல் மலைகளின் இளவரசி
எங்கள் மனநிலை அறிந்து வழிகாட்டி உற்சாகமாக இருக்க வேண்டுமென்று கொடை ஏரிக்கு (
(Kodaikanal Lake)அழைத்து சென்றார் , நம் கைரேகை மாதிரி மலைகளில் ரேகையாக வடியும் நீர் இளவரசி பள்ளதாக்கில் சேமித்து வைத்திருக்கிறாள் ,
(Kodaikanal Lake)அழைத்து சென்றார் , நம் கைரேகை மாதிரி மலைகளில் ரேகையாக வடியும் நீர் இளவரசி பள்ளதாக்கில் சேமித்து வைத்திருக்கிறாள் ,
அடே பாவிகளாக ..! ஏன்டா இந்த கொலைவெறி ! இந்த கடும் குளிரில் நாங்களே ஒளிந்து ! ஓடி .. வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .,,, எங்களை ஏன்டா ! பிடிக்கீறிங்க ! என மீன்களின் கதறல் இவர்கள் காதுக்கு எட்டவில்லை
அகப்படாத மீன்களைப் போல அங்கும் இங்கும் துள்ளி குதித்து ஓடிக் கொண்டே இருக்கும் மழலைகள் தூண்டில் மாதிரி சில அம்மாக்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள் .!அகப்பட்ட சிலமீன்களை துன்புறுத்துகிறார் கள் அம்மாமார்கள் , இன்னும் சில மீன்கள் கங்காரு குட்டி போல அப்பாக்கள் மடியில் .
இந்த கொடை ஏரியில் பல்வேறு பொழுதுப்போக்குகள் உதராணமாக குதிரை சவாரி (horse ride) ; கொடைக்கானல் சைக்கிள் சவாரி (Kodaikanal cycle ride ) ; படகு சவாரி (boat ride ) .... இன்னும் பல ....
இந்த கொடை ஏரியில் பல்வேறு பொழுதுப்போக்குகள் உதராணமாக குதிரை சவாரி (horse ride) ; கொடைக்கானல் சைக்கிள் சவாரி (Kodaikanal cycle ride ) ; படகு சவாரி (boat ride ) .... இன்னும் பல ....
கொடைக்கானல் ஏரி படகுச் சவாரி (boat ride at Kodaikanal lake)தவிர இந்த ஏரியில் விளையாடுவதற்கு பொழுது போக்குவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இந்தப் பேரழகி இளவரசி மறைத்து வைத்திருக்கிறாள்.
ஜாதி / மத கலவரம் நடந்தால் 144 ஊரடங்கு அரசாங்கம் தடை செய்வது மாதிரி அன்று கடும் பனிப்பொழிவு மலைச்சாரல் காரணமாக படகு சவாரி இந்த மலை இளவரசி எங்களுக்கு தடை செய்தால்.
நாம் பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை மறந்தது மாதிரி இந்த மிதிவண்டி பயனையும் முற்றிலுமாக மறந்து கொண்டிருக்கிறோம்.
சைக்கிள் என்ற சொல் இந்த சொல்லை கடந்து வளர்ந்து இருந்திருக்க மாட்டோம்.
மிதிவண்டியை கண்டவுடனே
உயர்கல்வி பயில்வதற்கும் அரசாங்க வேலைக்கும் அரசியல்வாதிகளை சிபாரிசுக்கு அழைப்பது மாதிரி மாமாவையும் வாடகை மிதிவண்டி வாங்க மணி கடைக்கு சென்றதும் மாலை நேரங்களிலும் , விடுமுறை நாட்களிலும் தெருவோரங்களில் வேகமாக சென்றதும்
இந்த நினைவுகுளவி கூடுக்கட்டியது ,
மிதிவண்டி எடுத்தோம் ! (Cycling at Kodai lake )
(பெடல் செய்த ஆரம்பித்தோம் ! வேகம் பிடித்தோம் ! முகத்தில் குளிர் காற்று படர்ந்தது ! மனதில் ஒரு வகை ஏக்கத்தை ஏற்படுத்தியது !சொல்ல வார்த்தைகள் இல்லை ..,
(பெடல் செய்த ஆரம்பித்தோம் ! வேகம் பிடித்தோம் ! முகத்தில் குளிர் காற்று படர்ந்தது ! மனதில் ஒரு வகை ஏக்கத்தை ஏற்படுத்தியது !சொல்ல வார்த்தைகள் இல்லை ..,
எங்களுக்குப் போட்டியாக ஆடவர்களும் , மங்கைகளும் , சிறுமிகளும் , சிறுவர்களும் போட்டி போட்டுச் சென்றனர் , எதிரிலும் பக்கத்திலும் நிறைய மிதிவண்டிகள் பறந்தன!
கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த மாதிரி இந்த ஏரியை சுற்றி மிதிவண்டியில் உற்சாகமாக உலா வந்தோம் .
குதிரை சவாரி என்பது உலகிலேயே மிகவும் பழமையான போக்குவரத்து ; இங்கே கண்ட காட்சி இளம் தம்பதினாரும் , பெரியோர்களும் , மூதியோர்களும் குதிரை சவாரி செய்தனார் ; அதில் ஒரு அப்பா தன் மகனை குதிரையிலே அமர்த்தி பயணத்தை ஆரம்பித்தார் ; மூக்கு ஒழுக அழுத பையன் ! அப்பா குடுத்த உற்சாகத்தில் உண்மையான ராஜாவாக திகழ்ந்தான். எல்லா அப்பாக்களுக்கு தன் மகன் ராஜா தான் என்று மனம் அசைப் போட்டு கொண்டது .
அந்திப் பொழுது கூட மார்கழி மாதம் விடியல் பொழுது போல் இளவரசி தோற்றமளித்தாள்,இது அந்திப்பொழுது தானா ! என்று கடிகாரத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டோம் ! இந்தக் குழப்பத்தில் தங்கியிருந்த விடுதியை அடைந்தோம் ;
விடுதியில் நாங்கள் சென்றபோது கோழிக்கும் மீன்களுக்கும் மஞ்சள் நீராட்டு விழா நடத்திக்கொண்டிருந்தார் ! அன்று நடந்த நிகழ்வுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தபோது நாசியை துளைத்து முரண்டு பிடித்த அந்த வாசனை எச்சி ஊற தூண்டியது ; அந்த மீன் குழம்பு எங்களை வா ! வா ! என்று அழைத்தது , என் தமையன் கரண்டியை செலுத்தி ஆழத்தில் துழாவி ஈரலும் , கறியும் அள்ளி போட்டுக்கொண்டான் . சோற்றில் கிடந்த தலைக்கறியா ! தொடைக்கறியா ! எதை முதலில் சாப்பிடுவது என்று முடிவெடுத்து ! தொடை கறியை எடுத்து ஒரு கடி இளவரசி மலை அதிரும்படி அடித்தொண்டையில் ஒரு குரல் , மலைகளிடையே இருந்த முழு நிலவு தமையன் பார்த்து சிரிப்பதே போல் சூழ்ந்திருந்த மேக கூட்டத்தின் மத்தியிலிருந்து அவசரமாய் வெளி வந்தது .


2 Comments
Super anna
ReplyDeleteNe oruthanya comment pnraaaa
Delete