**** நீ இன்றி நான் ! தொலைந்து போன என் தேவதை !

நீ இன்றி நான் ! தொலைந்து போன என் தேவதை !

தொலைந்து போன வாகனம் ! 


சாப்பிடும் வேளையில் நண்பர்களோடு உணவை பகிர வேண்டாமே ! - Corona awareness

அன்பான வாசக பெருமக்களே ! 

இந்த தலைப்பு காதல் கட்டுரை  தான் ! பெண்கள் மேல் கொண்ட காதல் இல்லை ! மிதிவண்டி மேல் கொண்ட காதல் மோகம் பயணம் இது ! மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் ! பயணிப்போம் !





‘றெக்க கட்டிப் பறக்குதம்மா அண்ணாமலை சைக்கிள் ’
என்று பாடல் பாடி மிதிவண்டியை ஓட்டியது நம்மில் பலர் !
மிதிவண்டி என்பது 1960 ஆண்டுகளில் சொகுசு வாகனம் , “ஏலே கவுட்டில மிதிச்சி விசுக்கி விசுக்கி சல்லு புல்லு போறான் பாருல “ என்று பேச வைத்த பொதுமக்கள் போக்குவரத்து , பேருந்துயில்லாத ஊர்களில் மூட்டும் பாதமும் தேய்ந்து போன தொழிலாளர்க்கு கனவு தேவதை என் மாமா இதை பற்றி நிறைய அனுபவங்களை சொல்லிருக்கிறார் அவர் 1970 காலங்களில் தூத்துக்குடியில் அழகேசபுரத்திலிருந்து முள்ளக்காடு வரை மிதிவண்டியில் சென்றதை அடிக்கடி கூறுவார் அதனால் தான் இப்போதும் இளமையாக உள்ளார் , 

முன்புயெல்லாம் மிதிவண்டி நிறுத்தும் இடம் ! தான் தொழிலாளர்கள் போராட்டம் கூட்டம் கூடும் இடம் !
அதே 1970 காலத்திலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மிதிவண்டியை தெரிந்து கொண்டிருந்தனர் , இது படித்த பெண்களின் நாகரீக குறீயீடு ; அவர்கள் சினிமாவுக்கும் , கல்லூரிக்கும் செல்லும் போது கிராமத்து பெண்களை பெரிதும் கவர்ந்துருக்கின்றன , இந்த மிதிவண்டி !
உடல் உழைப்பு சிறிது குறையாத சிறந்த ஆரோக்கியமான வாகனம் , இந்த மிதிவண்டி வீட்டில் மெக்கானிக் மற்றும் அறிவியல் ஆர்வலர்களை வளர்த்தது என்றால் அது மிகையாகாது ! மேலும் ஓடாத மிதிவண்டியை சரி பார்த்து பிற்காலத்தில் மிதிவண்டி கடையை போட்டவது பிழைத்துக் கொள்வேன் ! என்ற நம்பிக்கை ஏற்படுத்திய வாகனம் !

1980 காலங்களில் தாமரை இலையில் தண்ணீர் இருப்பது போல இருசக்கர வாகன ஆட்சியில் கூட மிதிவண்டி நன்றாக ஓடியது ,
பொறாமை , போட்டி தலையெடுத்த 1985 காலங்களில் பெரிய ,பெரிய , தொழில் அதிபர் முதலைகளால் தலையிட ஆரம்பித்த , இந்த டிவிஎஸ் 50 (TVS 50 ) இவற்றின் படையெடுப்பு ஆரம்பமானது , இதில் பாதுகாப்பு மற்றும் வேகம் இருந்தபோதிலும் உடல் உழைப்பு பழுதாக்கிவிட்டது ,  அது பல குடும்ப ஆணி வேர்களில் பாய்ந்தது.

இன்று சாலைகளில் புகைமுட்டத்தில் மூச்சு முட்டும் இருதய நோயாளிகளாக ஒட்டி செல்லும் நாமும் ,  நடை மறந்த நோயாளிகளாக சாலை ,  மனிதன் இருவரையும் மாற்றியது .
தற்போது இருசக்கர வாகனம் போய் நான்கு சக்கர வாகனம் வரவு ,கௌரவம் என்ற காளான் மாதிரி முளைத்துவிட்டது ! இன்று ,சாலையில் நடப்பவர்களையும் , மிதிவண்டி செல்பவரையும் கேவல சின்னம் செய்துவிட்டு ‘ ஓரம்போ  ‘ என்று சொல்லி ஒதுக்கிவிட்டோம் .

ஒவ்வொன்றும் வாழ்க்கை படங்களே என்ற பறை சாற்றிய நியூட்டன் மற்றும் சூரிய , சந்திர குடும்பத்தை ஆய்வு செய்தவர்களும் மேலும் காற்று ஒலி அளவீடு சொல்லி கொடுத்த விஞ்ஞன பெருமக்களின் அடிப்படை ஆராய்ச்சி பார்த்தல் இந்த மிதிவண்டி தான் !

மனித ஆரோக்கியத்தில் குறியீடு என்பதை தாண்டி வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சி மற்றும் வீட்டுக்கு வீடு வாசல் என்பதை விளக்கும் ,  இந்த சுழற்சி பாதையை வென்று முடிக்கும் புது வழியையும் கற்று கொடுக்கும் சுழற்சி அம்பு குறியீடாகவும் பேசும் மிதிவண்டி (சைக்கிள் ) வாகனம் இது .

தற்போது தெருவோரங்களில் குழந்தைகள் பயிற்சி செய்யும் போது முதல் வாகனமாய் இருப்பது மகிழ்வாக இருக்கிறது ,

எண்ணற்ற நோய்கள் மனித சமுதாயற்றத்தை கொன்று குவிக்கிறது தவறான முறையற்ற வாழ்க்கையை பின்பற்ற கொண்டிருக்கிறோம்
பால்காரர் , தபால்காரர் மற்றும் பேப்பர் காரரும் கூட மறந்து போன அதிகாலை அழைப்பு மணி என்னும் அமைதி வாகனம் .

கடந்த மாதம் உலக சைக்கிள் தினம் கொண்டினோம் எத்தனை பேருக்கு தெரியும் இது ! ஜுன் 3 

அன்றைய நாட்களில் அதிகம் வெளிவராத பெண்கள் ,வெகு தொலைவு நடந்த பெண்கள் , கௌரவம் ,தைரியம் மற்றும் விரைந்து கடக்கும் பாதுகாப்பாவும் இருந்தது என்பது என் கருத்து ! உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

நம் இல்லங்கள் மீண்டும் மிதிவண்டி (சைக்கிள்)  ஒலி மீண்டும் ஒலிக்கட்டும்"கிளிங் !! கிளங் !! என்று

மிதிவண்டியை மதிப்போம்!  மிதிவண்டியை மிதித்து பயன்பெறுவோம் !


மிதிவண்டி கட்டுரை வாசித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

Post a Comment

2 Comments