**** கொடை மலைகளின் இளவரசி சந்திப்பு - கடைசிப் பகுதி

கொடை மலைகளின் இளவரசி சந்திப்பு - கடைசிப் பகுதி


கொடைக்கானல்  மலைகளின் இளவரசி



வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼   


 பொது வெளியில் கை விரல்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாமே -  கொரோனா விழிப்புணர்வு 


இந்த பூம்பாறை வேறு உலகம் போல் காட்சியளித்தது ! இயற்கையே வரமாக கொண்ட விவசாயிகளுக்கு தங்க சுரங்கம் ; இந்த சுரங்கத்தை நிலத்தை உழுவதற்கு கோடைவெயில் கூட நிலா வெளிச்சம் தான் ! சோள தொகையில் தேங்கி நிற்கும் உருண்ட மழைத்துளி பனிக்காற்றில் தள்ளலுக்கு தாங்காமல் ‘விழுந்துட்டேன் விழுந்துட்டேன்’ என உருண்டு விழுந்து தண்ணீர்குடம் போல புல்லின் மீது உடைந்தது .
 இந்த நிகழ்வையெல்லாம் நினைத்து கொண்டு டால்பின் மூக்கு (dolphins nose at kodaikanal) என்ற இடத்தையடைந்தோம் ,


மேலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி தாழ்வான நிலத்தை நோக்கி செல்வது போல , இந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்து சென்றோம் ; வழியெங்கும் மனித மூளை செல்லும் எண்ணற்ற நரம்புகள் மாதிரி இந்த மர வேர் வழித்தடம் ( beautiful way towards dolphins nose or Rocky route to dolphins nose ).

டால்பின் மூக்கு பாறையில் நின்று பார்த்தால் கண்களுக்கு எட்டும் தூரம் வரை பசுமையே ! இந்த பசுமைக்கு மத்தியில் வெள்ளி மழை மாதிரி ஒழுகி வருது தண்ணி !

காட்டுவன யாவும் அழகென்று வேறென்ன அவ்வியற்கை அழகு ! தெருவோரங்களில் எத்தனை கோடி பணத்தை செலவு செய்து செய்யப்படும் செயற்கை அழகுக்கு இயற்கை அழகு ஈடாகுமா ! மனிதர்களால் ஆக்க முடியாத அழகுகள் பல இம்மலையில் திகழ்கின்றன ! என்ன அழகிய கற்கள் ! எத்தனை பல வகையான கற்கள் ! இவை கண்டதும் இவன் யாரோ ஆக்கின என்னென்ன இயற்கை அற்புதம் என்று  குரங்கு மாதிரி மலைமேல் ஏரி மரத்துக்கு மரம் மனம்   தாவுகிறது .





இந்த இயற்கை அழகை கண்டு  தச்சன் உளியினால் செதுக்கி அரும்பாடுபட்ட ஒழுங்குபடுத்தி அழகிய  பலப்பல வடிவான கற்குப்பைகள்  நிரல் நிரலான மலையில் எல்லா பகுதி கிடைக்கின்றன ,  உருண்டை ,சதுரம் , நீண்ட , முக்கோணம் ,   வடிவமும் மற்றும் சொல்ல முடியாத வடிவங்களும் மனது என்ற கண்ணைக் கவருகின்றன , 

 சுத்தமான காற்று மனித கண்களுக்கே தெரியாத துவாரத்தின் வழியே சென்று திகட்டச்செய்கிறது ,

 இவ்வியற்கை அழகை ரசித்து ,  வர்ணித்துக் கொண்டும் அடுத்த கொடை ஏரியை அடைந்தோம் ,  முந்தைய நாள் போல் எந்த இயற்கை சீற்றமும் இல்லாமல் ,  இளவரசி வழிவகுத்தால் படகு சவாரிக்கு , தூங்கிக்கொண்டிருந்த தண்ணீரை தட்டி எழுப்பி படகு சவாரி செய்ய ஆரம்பித்தோம் . 
எங்களுடன் சேர்த்து மீன்களும் சவாரி செய்ய ஆரம்பித்தது ..., 

படகு சவாரி செய்து கொண்டிருந்த போது திடீரென்று மழை சாரல் பனிமூட்டம் குடையாக இருந்தது ! பக்கத்தில் இருக்கும் ஒருவரை ஒருவர் கூட காண முடியாத அப்படி ஒரு பனிமூட்டம் !
சற்று நேரம் பிறகு பொழுது அடைந்த நேரம் உண்டியலில் காசு விரலுக்கு வெளிய மட்டும் தெரிகிற  மாதிரி இளவரசி மலைக்கு அங்கிட்டு தெரியுது அரைவாசி சூரியன். இந்த வெளிச்சத்துல   படகிலிருந்து பார்த்தா பச்சை சேலை நனைந்து போன  மாதிரி தெரியுது இந்த இயற்கை பேரழகி இளவரசி மலை !
இவ்வாறு இயற்கை அழகை ரசித்தபடி காட்சி நுகர்ந்தபடி படகு சவாரியை முடித்தோம்.


குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது வெளி உலகம் குளிர்ந்திருந்தது எங்களுக்கு உள்ளம் மட்டும் கொதித்து இருந்தது இந்த இளவரசியின் பிரிந்துசென்றதை நினைத்து. .....

வீட்டில் ஹோம் தியேட்டரில் கிடைக்காத இசை துளி பேரின்பத்தை இந்த இளவரசி மலையில் கேட்டேன் ! எத்தனை எத்தனை ஏசி களில் கிடைக்காத குளிர்காற்று இந்த மழை மரக்கிளையில் அனுபவித்தேன் ! புன்னகைக்கும் தோட்டத்துப் பூக்கள் இம்மலையில் !

ஒரு வேண்டுகோள் !
இயற்கை மலை சுரண்டியும் , மனித கனிம வளங்களை அழிப்பது மனித இனங்களைப் பெருக்குவது அடுத்த சந்ததிக்கு செய்யும் பெரும்பாவம்.!

பயணியாளர்க்கு கவனத்திற்கு !
ஒரு இடத்துக்கு பயணிக்கும்போது அங்கு உள்ள சிறப்புகளை ,  நன்மை ,  தீமைகளை அறிந்து கொண்டால்  பயணங்கள் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் ! கற்று  கொண்டே இருப்போம் .


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று !நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று !
 நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குடை !
  நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை !
இந்தப் பாடலை கேட்டுக்கொண்டே  விடைபெற்றோம் ..! 

நன்றி 

Post a Comment

1 Comments

  1. அருமையான பதிவு அண்ணா..

    ReplyDelete