**** World Heart day 2020 | உலக இருதய தினம்

World Heart day 2020 | உலக இருதய தினம்

 உலக இருதய தினம் கட்டுரை 



இன்றைய சூழ்நிலையில் இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்கிறது ! வருடந்தோறும் ஒரு கோடி பேர் உயிரிழக்கின்றனர் மேலும் 2030ல் 2 கோடியே 50 லட்சமாக உயரும் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கின்றது .

இருதயத்தின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாளாக செப்டம்பர் (செப்., 29) கடைசி நாள் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.


காரணம் என்ன?:

≥ கம்பெனிகளில் அதிக நேர வேலை ; இரவு வேலை மற்றும் குடும்பத்தின் சூழ்நிலையை நினைத்து நிம்மதியின்மை போன்றவையால் இருதய நோய் அதிகரிக்கின்றன

≥ உலகத்தில் மாரடைப்பால் இறப்பவர்களில் 30 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள் அதிக பேர் பாதிப்படைகின்றன ; மேலும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் அருகில் இருப்பவர்களுக்கும் பாதிக்கின்றன ; அதுமட்டுமின்றி இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைகிறது 

≥ சர்க்கரை நோய் காரணமாக ,மற்றும் உடல் அதிக எடை இருந்தாலும் இருதய நோய் வரலாம் ; சர்க்கரை நோயினால் ரத்த குழாய்கள் சேதமடைந்து இருதயத்துக்கு செல்லும் ரத்த அளவு குறைகிறது இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது 80 சதவீத பேருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது

தடுக்க வழிமுறைகள்

≥ குறைக்கவும் - உப்பு பயன்படுத்துவதை

≥ தவிர்க்கவும் - புகைப்பிடிப்பதை மற்றும் மது பழக்கத்தை.

≥ வைத்திருக்க வேண்டும் - கொலஸ்ட்ரால் - சர்க்கரை - ரத்த அழுத்தத்தை சீராக

≥செய்ய வேண்டும் - தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் --- யோகா ; தியானம் , மற்றும் உடற்பயிற்சி

 ≥ கடைபிடிக்க வேண்டும் - உரிய நேரத்தில் உணவு பழக்கங்கள் 

≥ முயற்சிக்க வேண்டும் - முடிந்த அளவு நடை பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் மற்றும் " எஸ்கலேட்டர் " "லிப்ட் " போன்றவை தவிர்க்கவும் 

≥ எடுத்துக் கொள்ளவும் - காய்கறிகள் மீன் பருப்பு வகைகள் மக்காச்சோளம் மற்றும் சுத்தமான நல்லெண்ணெய் 

≥ அயராது உழைக்கும் நம் இதயமும், சிரிக்க வேண்டாமா?

சிரியுங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரியுங்கள் நகைச்சுவை திரைப்படங்கள் மற்றும் வடிவேலு அதிகமாக ரசித்துப் பாருங்கள் இதுவே சிறந்த மருந்து

 பாதுகாப்பது எப்படி?

இன்று உலக இருதய தினம். 

இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் பற்றி டாக்டர் சிவராமன் கூறியது

≥ ஒமேகா-3எஸ் இருக்கிற மீன்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும் . கானாங்கெளுத்தி- கொய்மீன் _ சூரை-காலா, போன்றவற்றை அதிகம் சாப்பிடவும்.

  ≥ அக்ரூட் பருப்புகள் மற்றும் நிலக்கடலை - பாதாம் சத்தான கடலை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் .

≥ , அவரிநெல்லி, குருதிநெல்லி போன்றவை சாப்பிடலாம்.

≥ ஆளி விதைகள் இருதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அவைகளை அரைத்தோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.

≥ கம்பு - ஓட்ஸ்-கொள்ளு - பொதுவாக இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

≥ பச்சை பயிறு ,தட்டைப்பயிறு, சுண்டல் உள்ளிட்ட பீன்ஸ் ஆகியவை, நார்ச்சத்து, வைட்டமின் பி, மினரல் போன்றவை அதிகம் உள்ளது, இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தை அதிகம் அளிக்கின்றன.

≥ சர்க்கரைவல்லி கிழக்கு, பனங்கிழங்கு , கேரட், சிவப்பு மிளகாய் போன்றவைகளில் இதயத்தை வலுப்படுத்துகிறது.

≥ அதிகமாக கீரை வகைகள் எடுத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் , பொதுவாகவே ஆரோக்கியமானவை

≥ ஆரஞ்சு,பரங்கி, பூசணிக்காய், பப்பாளி, போன்ற பழங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

சொல்லுவது எளிது! கடைப்பிடிப்பது கஷ்டம் என்ற உங்கள் மனநிலை எனக்கு புரிகிறது ! இருந்தாலும் சொல்லுவோம் ! பத்து பேர்ல ஒருத்தனுக்கு போய் சேரும் என்ற நம்பிக்கையில் ! 

 

World Heard day ♥️ 


வாசிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி ! 



Post a Comment

2 Comments