**** அது ஒரு கனாக்காலம் - பகுதி - 1

அது ஒரு கனாக்காலம் - பகுதி - 1

 பள்ளிக்கூட வாழ்க்கை


அது ஒரு கனாக்காலம்


அத்தியாயம் - 1- அறிமுகம் 


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


இக்கதை தளத்தில் நடிகரோ ! நடிகையோ ! கிடையாது இதில் வரும் அனைவருமே நடிகர்கள் தான் ! ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் அனைவருமே நடித்து கொண்டுதான் இருக்கிறோம்....!


" யார் மனதையும் புண்படுத்தும் என்ற நோக்கம் இல்லை "

கதையை கதையாக பார்க்கவும்.




பூமி பின்னோக்கி சுத்துது 2005 காலத்துக்கு...!


 கோடை கால விடுமுறை முடிந்து ..,பள்ளிக்கூடம் திறக்கும் தினம் அன்று..!

 வகுப்பறை பிரிப்பதற்காக அவைக்களத்தில் ( auditorium) அமர்ந்திருந்தோம் ... இந்த அரங்கேற்றத்தில்  ..!

தனித்தனி பிரிவுகளாக அரட்டை அடித்து கொண்டிருந்தோம் ..

பிரிவு என்றவுடன்

சாதி என்று தவறாக எண்ண வேண்டாம்....!


மச்சி... எப்படியும் வகுப்பு பிரிக்க பதினோரு மணி ஆகிருல??

ஒரு மணி நேரத்தில் எல்லாருடைய அறிமுகம் நடக்கும்..! அதுக்கப்புறம் சாப்பாடு நேரம் தான் ...!                     இவன்தான் என் நண்பன் சிவா..,

ஏன்? இப்போ 

இதெல்லாம் சொன்னான் தெரியுமா ...?

ஏன்னா...  நோட்டு பையை எதுவும் கொண்டு வரவில்லை கைவீசி வந்துட்டான்...

அதுக்கு தான்...! இப்படி ஒரு கணக்குப் போடுறான்....  பரிட்சை தாள்களில் போட்ட கணக்கை விட இந்த கணக்கு துல்லியமாக இருக்கும்..!

இன்னொரு பக்கம் எட்டாம் வகுப்பில் இரண்டு பிரிவு தான்...!

ஒன்னு "அ" பிரிவு இன்னொன்னு "ஆ" பிரிவு

வகுப்பு பிரிக்க அரை மணி நேரம் ஆகும்...!

வகுப்பு பிரித்த பின் எந்த வகுப்பு நடக்கும்....!

கணக்கா - தமிழா - அறிவியல - சமூக அறிவியல என்று எல்லா நோட்டுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்...

 மகேஷ் இவனுக்கு இன்னொரு பெயர் கண்ணாடி ..!

படிக்கிற பையனா கண்ணாடி தானே..!

மாப்ள ..!மதியம் சாப்பிடுவதற்கு பக்கத்துல இருக்கிற கல்யாண மண்டபத்துக்கு போகலாம்..! இன்றைக்கு ஒரு கல்யாணம் நடக்குது ...!இது சாப்பாட்டு ராமன் பாலா ...

டேய் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ...!பக்கத்து பள்ளிக்கூடத்துல கிரிக்கெட் போட்டி கேட்டிருக்கேன்...! போய் விளையாடுவோம் ...! ஜெயிச்சா rs.20 என்றான் சதிஷ்.., சந்தானம் மற்றும் கார்த்திக்.

ஜெயிச்சா தானே கிடைக்கும் ...! என்று எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக  எண்ணம் கொண்டிருக்கும் மாரி..!

மூஞ்சில கம்பளிபூச்சிக்கு முளைச்ச பூனை முடிய பிடிச்சிட்டு சொல்றான் ..!போங்கல சின்ன பசங்களா..! நான் பக்கத்து பள்ளிக்கூடத்தில் போய் பொண்ணுங்கள பாக்க போறேன் ..!என்றான் வீரபுத்திரன் இப்போ தம்பி சரவணன் கூட இரண்டாவது வருஷம் எட்டாம் வகுப்பு இவனுக்கு ...

இப்படியே நாங்கள் அரங்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் இருவர் மட்டும் ரோஜா செடிகளை பார்த்து கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்தான் அய்யனார் மற்றும் அரசகுமார்..

ரோஜா செடியில் ஒரு ‘பூ பூத்து ’  இருந்தாள்...!           ‘பூக்காத மொட்டுகள் ’ எல்லாம் பூத்த பூவை சீண்டுவது உண்டு...! அதே மாதிரி

என் தோழி மஞ்சு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாவணியில் வந்திருந்தாள் ...!அவளை சுற்றி அத்தனை தோழிகளும் கீதா - சீதா - சங்கீதா - மேகலை - நவீனா - பானு - திவ்யா - தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனைவரும் அவளை நாணம் அடைய செய்து கொண்டிருந்தனர் . அந்த நாணத்தில் கண்ணம் சிவந்தது இந்த ரோஜாவுக்கு ..!

திடீரென்று மேஜையில் பிரம்பால் அடித்து  ..!

ஏண்டா மீன் மார்க்கெட் மாதிரி கூவிக் கிட்டே இருக்கீங்க ...!என்றார் கணக்கு வாத்தியார் டேவிட்.

இவர் இப்படி செய்தது மொத்த மாணவர்களும் நீர் பனிக்கட்டியாக மாறுவது மாதிரி !உறைந்து போய் இருந்தோம்..!

குண்டு ஊசி போட்டாலும் சத்தம் வரும் இடத்தில் ...!

கருக் ....முருக்.... என்று முறுக்கை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ...! சாப்பாட்டு ராமன் பாலா...!        புற்றுக்குள் இருக்கும் பாம்பு தலைதூக்கி பார்க்கிற மாதிரி !!அத்தனை பேரும் அவனை தான் பார்த்தார்கள் !! மீண்டும் ஆரம்பித்தது மீன் மார்க்கெட் ....  

ஒலிபெருக்கியில் இருந்து சத்தம் வர ஆரம்பித்தது...

ஒரு முக்கிய அறிவிப்பு...!

நமது தலைமையாசிரியர் காலமாகிவிட்டார்..!

அதனால் இன்று பள்ளி நிர்வாகம் விடுப்பு அளிக்கப்பட்டது...! மேலும் நாம் அனைவரும் ஐந்து நிமிடம் கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு விடை பெறுவோம்..! என்றார் வகுப்பாசிரியர் விஜி 

தங்கம் - விஜி - டேவிட் -  ஜாஸ்மின் - ஆகிய ஆசிரியர்கள் இவர்களுக்குள் யார்?? தலைமையாசிரியர் என்று எங்களுக்குள் போட்டி நடந்து கொண்டிருந்தது ...!

இப்போது என் நண்பர்களை பார்த்தேன்..! சந்தோசத்தின் உச்சகட்ட நிலையை அடைந்திருந்தார்கள்..!      தோழிமார்களை பார்த்தேன்...! கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருந்தது இந்த அரங்கம்...!


 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' ...


சேட்டைகள் ஆரம்பம்......






Post a Comment

2 Comments