**** ராமன் தேடிய ராவணன் - பகுதி- 4

ராமன் தேடிய ராவணன் - பகுதி- 4

ராமேஸ்வரம் பயணக்கட்டுரை


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 





சந்திதானம் நெருங்க ! நெருங்க ! பக்தர்கள் ஆக்ரோசமாக ...ஓம் நமச்சிவாயா...;; ஹரே ராமா என்று...;கோஷமிட்டனர்.

 வைணவர்கள் ஈசனை பார்த்து  ஹரே ராம் ..! என்றும்
..சைனவர்கள் ராமனைப் பார்த்து ஓம் நமச்சிவாயா ..! எனவும்
கோஷமிட்டுக் கொண்டிருந்தன.

அதுவும் இக்கோயிலில் ! ஒற்றுமையாக இருக்கிற கடவுளுக்கே வேற்றுமை ! உண்டாகிற இனம் நம்ம இனம் மட்டும் தான்!


இதற்கிடையில் ஒரு தகப்பனார் தன் மகனை கருவறையில் இருக்கும் கடவுளை பாருடா ! என்று தோளுக்கு மேல் தூக்கினார்.
 நான் வந்த கருவறைக் கடவுள் இதுதான்டா .., என தன் அம்மாவின் முடியை பிடித்து இழுத்தான் ...,;
அவங்க அம்மா அவனுக்கு விபூதி அடிச்சு !
நீ உலகத்துக்கு வந்ததுக்கு - தெய்வ செயல்பா ! என்று கைகூப்பி தெய்வத்தை வணங்க வைத்தால் அந்த தெய்வம் !

இந்தக் கூத்தை பார்த்து சிவனுக்கு நெற்றிக்கண் திறந்த இருந்த மாதிரி ! எங்களுக்கு ஞானக்கண் திறந்தது.

வாழ்வைத் தொலைத்த காட்டில் மனிதம் தேடுவதே - என் தேடல் .
ஒரு மரத்தில் நுழைந்து அதைக் குடைந்து குடைந்து மரத்திசுக்களை வெளியே தள்ளும் வண்டு மாதிரி - எனக்குள் விழுந்து என்னை ஊடறுத்து உறங்க விடாமல் செய்யும் உள்ளடங்களுக்கே உருவம் கொடுக்கிறேன் - சர்வமும் சிவமயம் 

ஏதேதோ ! நினைவுகளுடன் பக்தி மௌனத்துடன் சுவாமி தரிசனம் செய்தோம்.

தீபாராதனைத் தட்டு அருகில் நீட்டும்போது ! வெப்பமான சூடம் சுகந்தத்தை இருக்கையிலும் தொட்டு முகத்தில் ஒற்றிக் கொண்டு..;  விபூதிப் பிரசாதத்தை பட்டையடித்தும்
அதில் குங்குமத்தை நாமும் போட்டுக் கொண்டோம் .

கோயிலுக்கு வந்தால் கொஞ்சம் உட்காரணும் என்பது - ஐதீகம் ! 

விசாலமான பிரகாரம் கருங்கல் தள வரிசை ஜனக் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்தோம் ; வானத்தில் நட்சத்திரக் கூட்டத்தில் மத்தியில் அமர்ந்த ஓர்  உணர்வு !

வட்டமிட்டு பிரகாசமாக ஒளிர்விட்ட கூட்டு நட்சத்திரங்கள் - கூட்டுக்குடும்பங்கள்

ஆங்காங்கே சிதறிக்கிடந்த நட்சத்திரங்கள் - தனிக்குடும்பங்கள்

இதற்கு மத்தியில் நாங்களும் இருக்கும் எங்களுக்கும் 
வானத்தில் பங்கு உண்டு ! மின்மினிப் பூச்சி போல ஒளிர்விட்ட நட்சத்திரங்கள் - முதியோர்கள்

அங்குமிங்கும் நிலாவை சுற்றி வலம் வரும் சிறுசிறு நட்சத்திரங்கள் -  காதலர்கள்

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு செயல்கள் புரிந்து கொண்டிருந்தனர் ; பல்வேறு ராமாயணங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது ! என்ற எண்ணம் தோன்றியது.


ஆலய மணியோசை மலர்களின் மனத்துடன் கலந்து வந்த சாம்பிராணி வாசனை மனம் இக்கோயிலை சுற்றி வலம் வந்தது.

அடடடடா ! சொல்ல வந்ததை சொல்லாமல் சுற்றி திரிகிறது மனசு ..!
சொல்ல வந்ததை விட்டுவிட்டு ஜல்லிகட்டு அத்துவிட்ட காளை மாதிரி ! எங்கெங்கோ சீறிப்பாய்ந்து ஓடுது மனசு.

கோயில் கோபுரம் பெரியது ! அதில் வாசல் சிறியது ! - வாஸ்து விதி .




சீதையின் மனக்கதவு நுழைய கண்கள் என்ற  வாசல் வழி சிறியது ! 
பிரகாரத்திற்கு செல்ல ! செல்ல ! வளர்கிறது காதல்;( 690 அடி நீளமும் 435 அடி அகலமும் )
காதலுக்கு துணையாக 1112 தூண் பிரகாரம் தாங்கி நிற்கிறது ! ( லட்சுமணன் மற்றும் அனுமன் ).
மேல்நோக்கி பார்த்தால் ! ஆகாயம் தொடுயளவுக்கு  12 வருடங்களுக்கு இயற்கையை எதிர்த்து தாங்கக்கூடிய கலசம் . (14 வருட வனவாசம்)

இப்படியே ராமநாதபுரத்தை ஆண்ட பாண்டிய மன்னர் மற்றும் அதன் பின் ஆண்ட சில மன்னர்கள் 
இக்கோயிலை  வர்ணித்துக் கட்டியுள்ளனர்.


இக்கோயிலிருந்து அடுத்த வரலாறு தெரிந்து கொள்ள வண்டியில் மீண்டும் பயணித்தோம் ...

வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று உருக்கப் பார்க்குது வெயில் . 

ஶ்ரீசெளந்தரி அம்மன் கோயிலை தாண்டி - ஜாம்பவான் தீர்த்தம் கடந்து - ஒத்தையடி பாதையில் ஏறி இறங்கினால் வந்துவிடும் இராமர் பாதம் ....

பயணம் தொடரும்.....




Post a Comment

0 Comments